பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 கல்வெட்டுக்கள்= = மக்களும், இலக்கியங்களும், சிறப்பாகச் சேது எனக் குறிப்பிடுகின்றனர். இந்த அணை இராமேஸ்வரத்தை அடுத்துள்ள இன்றைய தனுஷ்கோடிக்கரையில் தொடங்கி, கிழக்கே இலங்கையின் மேற்கு கரையுடன் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இன்றும் தனுஷ்கோடிக்கும், இலங்கை நாட்டுத் தலைமன்னாருக்கும் இடையில் கடலில் சிதைந்து காணப்படும் மணல் திட்டின் தொடர் அந்த அணையின் எச்சம் என இப்பொழுது கருதப்படுகிறது. அதனை இன்று மீனவர்கள் இராமன் திட்டை என வழங்கி வருகின்றனர். இந்த அணையை அடுத்துள்ள நாடு சேது நாடு எனவும் இந்த நாட்டின் அதிபதிகளான மறவர் சீமை மன்னர்கள் சேதுபதிகள் எனவும் வழங்கப்பட்டனர். சேனையின் அதிபதி சேனாதிபதி எனவும், பசுவின் தலைவன் பசுபதி என்றாற்போல சேதுவிற்கு அதிபதி ஆன மன்னர்கள் சேதுபதிகள் ஆவார். இந்த மன்னர்களது தொன்மை இராமாயணக் கதையுடன் தொடர்பு படுத்திச் சொல்லப்பட்டு வருகிறது. இராமபிரான் இராவணனை வதைத்து இலங்கையில் இருந்து திரும்பிய பொழுது இன்றைய இராமேஸ்வரத்தில் சிவலிங்கப் பிரதிட்டை செய்து சீதாப்பிராட்டியுடன் இறைவனை வழிபட்டதாகவும் அதன் பிறகு அங்கிருந்த மறவர் இனத் தலைவரை அழைத்து, அந்தப் புனித இடத்தைப் பாதுகாத்துப் பராமரித்துவருமாறு பணித்ததாகவும் கருதப்படுகிறது. மேலும், அந்த மறவர் இனத் தலைவரது வழித்தோன்றல்களே சேதுபதி மன்னர்கள் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் வரலாற்றுப் பார்வையில் சேதுபதி மன்னர்களது பழமையை ஆய்வு செய்யும்பொழுது மேலேகண்ட உண்மைகளைப் புலப்படுத்தக் கூடிய மூல ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. என்றாலும். இந்த மன்னர்களது மறவர்களது செம்பி நாட்டுப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்று அறியப்படுவதாலும் இவர்கள் சோழ