பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 - சேதுபதி மன்னர் கி.பி. 1528-க்கும் கி.பி.1584-க்கும் இடைப்பட்ட காலத்தில் மன்னார் வளைகுடாப் பகுதியில் போர்ச்சுக்கீசியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்தவ மதத்தை முதன் முறையாகப் புகுத்தியவர்கள் இந்த போர்ச்சுக்கல் நாட்டு பாதிரிமார்கள் ஆவர். இவர்கள் 16ஆம் நூற்றாண்டில் தூத்துக்குடிக்கும் இலங்கையின் வடகோடியில் உள்ள யாழ்ப்பாணத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த மீனவர்களிடம் பிரச்சாரம் செய்து அவர்களை இந்தப் புதிய மதத்தை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தனர். இந்தப் பணியில் முதன் முறையாக இத்தாலி நாட்டில் இருந்து வந்த அந்தோணி கிரிமிநாலிஸ் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் இந்த நீண்ட கடற்கரையில் பல காலம் சமயப் பணியை மேற்கொண்டிருந்தார். கி.பி.1547-ல் வேதாளை கிராமத்தில் ஏற்பட்ட பூசலில் அவர் கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து சமயப் பணியை மேற்கொண்ட போர்ச்சுக்கல் நாட்டுப் பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் என்பவர் கி.பி.1555 வரை தொண்டி வரையான இந்த கடற்பகுதியில் பல சிறிய தேவாலயங்களை நிர்மானித்தார். அப்பொழுது தான் முத்துப்பேட்டையில் உள்ள இந்த சர்வேஸ்வரன் தேவாலயமும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பொருத்தமான உண்மையாகும். ஏனெனில் இந்தப் பாதிரியார் கீழக்கரையிலும் காரங்காடு, இராமேஸ்வரம், கரையூர் கடற்கரையிலும் தேவாலயங்களை அமைத்துள்ளார் சமயப் பொறைக்கு முன்னோடிகளாக திகழ்ந்த சேதுபதி மன்னர்களில் இறுதி மன்னரான முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னர் முத்துப்பேட்டை தேவாலயத்தின் பராமரிப்புச் செலவிற்காக சங்கரன்வலசை என்ற சிற்றுரையும், அதனை அடுத்துளள முத்துப்பேட்டை கிராமத்தையும் இந்த தேவாலயத்திற்கு கி.பி.1781-ல் சர்வ மான்யமாக வழங்கி உத்தரவிட்டார். இந்த தானத்தை குறிக்கும் வகையில் இந்த கல்வெட்டினைப் பொறித்து வைத்தார். மேலும், இந்தக் கல்வெட்டில் முத்துப்பேட்டை சுங்கச் சாவடியில் இருந்து நாள்தோறும் இரண்டு பணத்தினை 1. Jaya seela Stephen Dr. - Portugeesh in Tamil Nadu (1998)