பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சேதுபதி மன்னர் இருந்துவந்த படை அணிகள் இராமநாதபுரம் கோட்டைக்கு யாரும் எதிர்பாராத வண்ணம் நுழைந்து ஆக்கிரமித்து சேதுபதி மன்னரையும் கைது செய்து திருச்சிக் கோட்டைக்கு அனுப்பிவைத்தது.' அன்று முதல் கம்பெனியாரால் பறிமுதல் செய்யப்பட்ட சேதுந்ாடு ஆங்கிலேயரது நேரடி நிர்வாகத்தில் இயங்கத் தொடங்கியது. கலெக்டர் பவுனி என்பவர்.இராமநாதபுரம் சீமை நிர்வாகத்தை ஏற்று நடத்திவந்தார். சேதுபதி மன்னரது அத்தாணி மண்டபமான இராமலிங்க விலாசம் அரண்மனையில் அவரது கச்சேரி அமைக்கப்ப்டடது. சேதுநாட்டில் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிகளினாலும் சிவகங்கைப் பிரதானிகளான மருதுபாண்டியர்கள், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர், மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர் ஆகிய மக்கள் தலைவர்களது தூண்டுடுதலினாலும், கம்பெனியாரது உடைமைகளுக்கும். கம்பெனி அலுவலர்களது உயிருக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டது. ராணுவத்தைப் பயன்படுத்தி இந்த வன்முறைக் கிளர்ச்சிகளை அடக்கி ஒடுங்கிய கம்பெனி நிர்வாகம் சேதுபதிச் சீமையின் நிர்வாகத்தை மாற்றி அமைக்க முற்பட்டனர். கும்பெனி நிர்வாகத்திற்கும், குடிமக்களுக்கும் இடையில் இடைத்தரகர் ஒருவரை நியமனம் செய்விப்பது மூலம் கும்பெனி நிர்வாகத்தினர் இழப்பீடுகளிலிருந்து தங்களை காத்துக் கொள்ள புதிய முறை ஒன்றை இங்கு நடைமுறைப்படுத்தினர். இதன் பெயர் ஜமீன்தாரி முறை ஆகும். இந்த முறையினை கும்பெனியார் கி.பி.1797-ல் முதன்முறையாக பீகார் ஒரிசா மாகாணங்களின் பகுதிகளை உள்ளடக்கிய வங்க மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்திவந்தனர். இந்த முறையின் படி ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் முகவராக ஒருவர் நியமிக்கப்படுவார். அவரது முதன்மையானதும், இறுதியானதுமான ஒரே பணி, குடிமக்களிடமிருந்து கும்பெனியாருக்கு செலுத்த வேண்டிய தீர்வைகளை ஒழுங்காக வசூலித்து செலுத்துவது ஆகும். அந்த முகவர் ஜமீன்தார் என்றும் அவர் வரிவசூலிக்கும் பகுதி . 1. Militry Consultations Vol 188A, 8.2.1795, PP 322-23