பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15? -- -------------- சேதுபதி மன்னர் 7. ராமசாமி சேதுபதியின் மக்களான பர்வதவர்த்தினி, மங்களேஸ்வரி ஆகியோருக்காக மேற்படியாளர்களது கார்டியன் ராணி முத்து வீராயி நாச்சியார் - கி.பி.1830 முதல் 1840 வரை 8. ராணி பர்வதவர்த்தினி நாச்சியார், (க/பெ. ராமசாமி சேதுபதி) - 20.4.1846 முதல் 1861 வரை 9. ராஜா முத்துராமலிங்க சேதுபதி - கி.பி.1861 முதல் 1873 வரை (ராணி பர்வதவர்த்தினி நாச்சியாரின் சுவீகாரப்புத்திரன்) 10. ராஜா பாஸ்கர சேதுபதி - கி.பி.1873 முதல் 1903 வரை 11. நீதிமன்ற நிர்வாகம் - கி.பி.1903 - கி.பி.1914 வரை 12. ராஜராஜேஸ்வரா என்ற முத்துராமலிங்க சேதுபதி - கி.பி.1914 முதல் 1924 வரை 13. நீதிமன்ற நிர்வாகம் - கி.பி.1925 முதல் 1928 வரை 14. ராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி - கி.பி.1929 முதல் 1948 6u6лэгт ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் மறவர் சீமையின் தன்னரசை கி.பி.1795-ல் பறிமுதல் செய்து தங்களது உடமையாக மாற்றியும், அப்பொழுது இருந்த முத்துராமலிங்க சேதுபதி மன்னரைப் பாதுகாப்புக் கைதியாக திருச்சிக் கோட்டையில் அடைத்தனர். மேலும் மறவர் சீமையை அவர்களது நேரடி நிர்வாகத்தில் இருத்திக் கொண்டனர். இந்தநிலை எட்டு ஆண்டுகளுக்கு நீடித்தது. இதற்கிடையில் சிறைப்பட்ட சேதுபதி மன்னரது தமக்கையார் மங்களேஸ்வரி நாச்சியார் மறவர் சீமையின் பட்டத்துக்குத் தாமே வாரிசு எனத் தெரிவித்து ஆற்காட்டு நவாப்பினையும், ஆங்கிலக்