பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 l இயல் 32 | பூலாங்குடி கல்வெட்டு இந்தப் புதிய நிர்வாக அமைப்பின் தலைவராக கி.பி.1812ஆம் ஆண்டு வரை நீடித்த ராணி மங்களேசுவரி நாச்சியார் பல ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார். அவரது அறக்கொடைகள் தொன்னுாறு தர்மாசனங்கள் என வழங்கப்பெற்றன. சேதுக்கரை பூரீனிவாசப்பெருமாள் ஆலயம், நயினார் கோயில் ஆலயம், திருச்செந்தூர் முருகன் ஆலயம், மதுரை திருஞான சம்பந்தர் மடம் ஆகியவை அந்த அறக்கொடைகளில் அடங்கும். மதுரையிலிருந்து இராமநாதபுரம் கோட்டைக்கு வரும் வழியில் இராமநாதபுரத்திற்கு பத்து கல் தொலைவில் ஒரு சத்திரம் ஒன்றினையும் ஏற்படுத்தினார். இந்தப் பகுதி நாளடைவில் சத்திரக்குடி என்ற ஊராயிற்று. இவரது நிர்வாகத்தின் பொழுது ராஜசிங்கமங்கலம் கண்மாய், உள்வாயிலில் உள்ள பூலாங்குடி என்ற கிராமத்தில் பூவில் இருந்த திருக்கண்ணுடைய ஐய்யனாருக்கு