பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் சேதுபதி மன்னர்களைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்ட சிலர் சேதுபதி மன்னர்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டவர்கள் என்றும், மதுரை நாயக்க மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் என்றும் தங்களது கருத்துககளைக் குறிப்பிட்டுள்ளனர். அருட் தந்தை டெய்லர் அவர்கள் தொகுத்துள்ள தொகுப்பில் ஒரு பழைய ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆவணத்தின் சுருக்கம் ஆவது, மதுரையில் ஆட்சி செய்த முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னரது ராஜகுரு இராமேஸ்வரம் தலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது இராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலை ஆறலை கல்லர்களால் ராஜகுருவிற்கு எவ்வித சிரமும் இல்லாத வகையில் அவர் தமது யாத்திரையைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் புகலூர் உடையான் சேதுபதி செய்தார் என்றும் இதனைக் கேள்விப்பட்ட மதுரை மன்னர் மிக்க மகிழ்ச்சியுற்று உடையான் சேதுபதியை மதுரைக்கு வரவழைத்துச் சிறப்பான மரியாதைகளைச் செய்வித்துப் பாராட்டி அனுப்பி வைத்தார் என்ற செய்தி அறியத்தக்கதாக உள்ளது. இந்த நிகழ்வினை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுள்ள வரலாற்று ஆசிரியர் ஏ. நெல்சன் என்பவர் சேது மன்னர்கள் பிற்காலத்தில் தோன்றியவர்கள் என்ற கருத்தினை மறுத்து இந்த கடற்கரைப் பகுதியில் வலிமை மிக்க தன்னரசு ஒன்று இல்லாமல் இருந்தால் நூற்றாண்டுக் காலமாக தொடர்ந்து வரும் சேது யாத்திரை பயணிகளுக்குப் பாதுகாப்பும் அந்தப் பகுதியில் அமைதியும் நீடிக்க இருக்க முடியாது என வரைந்துள்ளார்." இந்தக் கருத்தினை வலுவூட்டும் வகையில் ஆசிரியர் ஜேம்ஸ் பெர்கூசன் எழுதியுள்ளது வரலாற்றுச் சான்றாக அமைந்துள்ளது." அந்த நூலில் இராமேஸ்வரம் கோயிலில் உடையான் சேதுபதி என்பவர் கி.பி.1414ல் திருக்கோயிலின் மேல கோபுரத்தையும், திருச்சுற்று"மதிலையும் எழுப்பித்த செய்தியினைக் கொண்ட கல்வெட்டினையும், கி.பி.1444ல் சின்ன உடையான் சேதுபதி என்பவர் (f.\Tàyloru Old Historical Manuscript (1831) Part II 2. Nelson Manual of Madura Country (1861) Part III - Page 4 - 3. James Perquson.- The History of India & the great eastern Architecture (1881)