பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 - சேதுபதி மன்னர் பாஸ்கர சேதுபதி மன்னர் இந்தக் கோயிலை மறு அமைப்பு செய்த செய்தியைக் கோயிலின் கருவறை தென் சுவற்றில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.1895 ஆகும். பொதுவாக சிவாலயங்களில் பெருமாளுக்கும் தனியாக சன்னதி அமைத்து வழிபாடு நடத்துவது தமிழகத்தின் மிகச் சில ஊர்களிலேயே உள்ளன. தில்லை நடராசா சன்னதிக்கு எதிரே கோவிந்தராசப் பெருமாள் சன்னதி அமைக்கப்பட்டிருப்பது போல இராமநாதபுரத்திலும் சொக்கநாதர் ஆலயத்தின் தென்பகுதியில் கோதண்டராமர் சுவாமிக்கு தனியாகச் சன்னதியும் கோயிலும் ஏற்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.* 1. “ஸ்வஸ்திரு.சாலிவாகன சகாப்தம் 1825 சோபகிருது இ. 2. இராமநாதபுரம் சமஸ்தானம் பூரீ ஆதி ஜெகநாதப் பெருமாள் கோவிலின் அபிமான 3. ஸ்தலமாகிய மேல்ப்படி இராமநாதபுரம் கோதண்டராம ஸ்வாமி கோவில் இந்த 4. கெற்பக்கிரகம் அர்த்தம்.ண்டபம் செங்கல் கட்டிடமாகவும் 5. ஜீர்னமாகவும் இருந்ததைப் பிரித்து கலத்திருப்பணியாக இராமநாதபுரம்