பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19C) சேதுபதி மன்னர் l இயல் 42 | செய்தித் தொகுப்பு ஒரு நாட்டின் அரசியல் சமுதாய வாழ்க்கையின் முன்னேற்றத்தை அறிவிக்கும் காலச் சுவடுகளாக அமைந்து விளங்குபவை, அந்த நாட்டின் கல்வெட்டுக்களாகும். வரலாற்றின் போக்கினை அறிந்து கொள்வதற்கு ஏதுவான தடையங்கள் இவை என்ற வகையில் இவைகளைத் தேடிப்பிடித்து படி எடுத்துத் தொகுக்கும் பணியினை இந்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத் துறை கி.பி.1879ல் கன்னிங்கேம் பிரபு என்பவரால் தொடங்கப்பட்டது. இந்தத் துறையினர் இதுவரை தமிழ்நாட்டில் சுமார் நாற்பதினாயிரம் கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும் தேடிப்பிடித்து படி எடுத்துள்ளனர். அவைகளின் தொகுப்பாக ஏறத்தாழ பதினைந்தாயிரம் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் பல தொகுதிகளாக இதுவரை அச்சில் வெளிவந்துள்ளன. இந்தப் பணி காலப் போக்கில் தளர்ச்சியுற்று சிறப்பாக நடைபெறவில்லை. ஏற்கனவே படியெடுத்த கல்வெட்டுக்களைத் தவிர்த்து இன்னும்