பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சேதுபதி மன்னர் கிடாத்திருக்கை நாடு, ஆப்பனுர்நாடு, கமுதை நாடு, அளற்றுத்து நாடு, வேம்பு நாடு, பருத்திக் குடி நாடு, கருநீலக்குடி நாடு ஆகிய பகுதிகளை மட்டுமே உள்ளடக்கி இருந்ததாகத் தெரிகிறது. கி.பி.1645-ல் சேதுபதி மன்னராக அறிவிக்கப்பட்ட திருமலை ரெகுநாத சேதுபதி, தமது ஆட்சியில் சேது நாட்டின் எல்லைகளை வடக்கே அதளையூர் நாடு, கல்லக நாடு, புறம்மலை நாடு, சூரக்குடிநாடு, கள்ளர் நாடு, கழனிவாசல் நாடு, முத்துர்நாடு, கல்வாசல் நாடு, உருவாட்டி நாடு, உஞ்சினை நாடு, பூங்குன்ற நாடு ஆகிய பகுதிகளை இணைத்ததுடன் இன்னும் சற்று வடக்கே சோழ மண்டலத்திற்குள் புகுந்த அறந்தாங்கிச் சீமை, பட்டுக்கோட்டைச் சீமை, திருவாவூர்ச் சீமை, கள்ளர் சீமை ஆகிய பரந்த பகுதிகளையும் தஞ்சை மன்னர்களிடமிருந்து கைப்பற்றிச் சேதுபதி சீமையின் பகுதிகளாக மாற்றினார். மேலும் மதுரை மண்டலத்தின் மீது கி.பி.1658ல் படையெடுப்பை மேற்கொண்ட கன்னடியர்களை புறமுதுகிட்டு ஓடுமபடி செய்தார். மதுரை திருமலை நாயக்க மன்னருக்காக பெற்ற இந்த வெற்றியினைப் பாராட்டி திருமலை நாயக்க மன்னர், மதுரை மண்டலத்தின் கிழக்குப் பகுதியான திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பள்ளிமடம் ஆகிய பகுதிகளையும், திருமலை ரெகுநாத சேதுபதி 'மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கினார். மேலும் தெற்கே திருநெல்வேலிச் சீமைப் பகுதியில் மன்னர் கோயில் வேறு சில பகுதிகளையும், வங்கக் கடலின் தென்பகுதியில் முத்துக்குளிக்கும் உரிமையும் வழ்ங்கினார். இதனால் சேது நாடு பாண்டிய நாட்டினை ஒத்த பெரும் நிலப்பரப்பாகவிளங்கியது. ஆனால் இந்த மன்னரை அடுத்து சேதுபதி பட்டம் தரித்துக் கொண்ட ரெகுநாத கிழவன் சேதுபதியின் ஆட்சியின்பேர்துசேது நாட்டின் வடபகுதியான புறமலை நாட்டையும், கொடுங்குன்றம் என்ற பிரான்மலைக்கும் அப்பால் உள்ள கள்ளர் சீனிமியை அந்தம்ன்ன்ரது மைத்துனர் ரெகுநாதராயத் தொண்டைமான் தன்னரசராக தம்மை அறிவித்துக் கொண்டார். -