பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 கல்வெட்டுக்கள் மொத்தம் - 35 இந்தக் கல்வெட்டுக்களில் இராமேஸ்வரத்தில் உள்ள உடையான் சேதுபதி சின்ன உடையான் சேதுபதி ஆகிய இரு மன்னர்களது (இரண்டு கல்வெட்டுக்கள்) கல்வெட்டு வாசகங்கள் கிடைக்கப்பெறாததால் அவை இந்தப்பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இந்தக் கல்வெட்டுக்கள் இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில கீழக்கரை, இராமேஸ்வரம், பெருங்கரை, போகலூர், முதலூர், நயினார் கோயில், காரடர்ந்த குடி, இராமநாதபுரம் இதம்பாடல் ஆகிய ஊர்களிலும் சிவகங்கை மாவட்டத்தில் குளுவன்குடி, சிவபுரி, மதுரை மாவட்டம் ஆலம்பட்டு ஆகிய ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்கார்குடி, திருமெய்யம் மேலையூர், விரையாச்சிலை காட்டு பாவா பள்ளிவாசல், தாஞ்சூர், மிதிலைப்பட்டி ஆகிய ஊர்களிலும் காணப்படுகின்றன. மேலேகண்டவைகளைத் தவிர வேறு சில கல்வெட்டுக்களும் கி.பி.1414, 1424, 14:47, 1500ம் வருடம் இராமேஸ்வரம் திருக்கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்வெட்டுக்களின் முழுமையான வாசகம் காலநீட்சியின் காரணமாக கிடைக்கவில்லை. இவை போன்று இன்னும் ஏராளமான கல்வெட்டுக்கள் காலப்போக்கில் கடலின் உப்புக் காற்று போன்ற அமிலத்தன்மையினால் அழிந்தும சிதைந்தும் மழுங்கியும், மறைந்தும் விட்டன. இவை தமிழக வரலாற்றிற்கு ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும். இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டுக்கள் கீழ்க்கண்டவையினரால் வெளியிடப்பட்டுள்ளனர். 1. புதுக்கோட்டை தர்பார் வெளியிட்டுள்ளவை - 6