பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"[] | கல்வெட்டுக்கள்= --- ------------ என்றும்) நஞ்சை, புஞ்சை மானவாரி, நத்தம் என்பனவும் வகைப்படுத்தப்படாத நிலம் சுரூபம் என்றும் அவைகளின் எல்லை' பகுதி புரவு என்றும் வழங்கப்பட்டு வந்தது இந்தக கல்வெட்டுக்களிலிருந்து தெரியவருகிறது. இந்த நிலங்களை சேதுபதி மன்னரது அலுவலர்கள் அறுதியிட்டு (வேலிமா குறுக்கம்) என்ற நில அளவைகளில அறுதியிட்டு வழங்குவதற்கு முன்னர் அந்த நிலங்களின் பெருநான்கு, எல்லைகளைச் சரிபார்த்து எல்லைக் கற்களை நாட்டி வைத்தனா குடிகளுக்கு வழங்கப்பட்ட இந்த அறக்கொடை நிலங்களின் எல்லைக்கல் புரவுக்கல் என்றும் சிவன் கோயில் எல்லைகளுக்காக எல்லைகக்ல் சூலக்கல் என்றும் வைணவக் கோயில் நிலங்களுக்கு நாட்டப்படும கல்திருவாழிக்கல் என்றும், கிறுத்தவ தேவாலயங்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகளுக்காக எல்லைக்கல் சிலுவைக்கல் என்றும் பெயரிடப்பட்டு இருந்தன. மேலே கண்ட நிலங்களில் பெரும்பாலும் நஞ்சை நிலங்கள் வயல் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலங்களை மழைப் பெருக்கினால் திரண்டு வரும் ஆற்று வெள்ளைத்தைக் கொண்டு விளைபொருள்கள் வேளாண்மை செய்யப்பட்டன. இதற்கு உதவும் பொருட்டு வெள்ளநீர் ஆங்காங்கு தாழ்வான பகுதிகளில் தடுக்கப்பட்டும் தேக்கப்பட்டும் மண்ணால் கரைகள் எழுப்பப்பட்டன. (இத்தகைய கரை ஒன்றினையே பெயராகக் கொண்ட பெருங்கரை என்ற சிற்றுர் பற்றிய திருமலை ரகுநாத சேதுபதி மன்னரது கல்வெட்டு இங்கே குறிப்பிடத்தக்கது) இவ்விதம் தடுப்பு அணைகள் அமைக்கப்பட்டு வெள்ளம் தேக்கப்ட்ட பகுதிகள் கண்மாய்கள் எனவும் அவைகளின் வடிகால் வெள்ளத்தினால் அமைக்கப்பட்ட சிறிய தேக்கங்கள் ஏந்தல், ஏம்பல் என்றும் இன்னும் இவைகளிலும், அளவிலும் ஆழத்திலும் சிறியனவான நீர்ப்பகுதிகள் குளம், குளபரப்பு. குட்டை, குண்டு என்றும் சேதுபதி சீமையில் வழங்கப்படு வந்தன. (இன்றும் அந்த