பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 --- சேதுபதி மன்னர் வழக்குகள் நீடிக்கின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). கண்மாய்களிலிருந்து வெள்ளத்தை தேவையான நஞ்சை நிலங்களுக்கு எடுத்துச சென்று உதவுவதற்கு கால்கள் எனப்படும் நீண்ட வாய்க்கால்கள் அமைக்கப்பட்டிருந்தன். இந்த வாய்க்கால்களுக்கு தேவையான நீரை அப்பொழுதைக்கு அப்பொழுது வெளியேற்றி உதவுவதற்காக கண்மாய்க் கரையில் நீரை வெளியேற்றும் அமைப்புக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்ததை இந்தக் கல்வெட்டுககள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்புகளில் பெரியதும், பல கண்களை உடையதுமான அமைப்புகலுங்கு என்றும், இவற்றின் சிறிய பகுதிமடை எனவும் வழங்கப்பட்டதைத் தளவாய் உடைய நாயனான இரண்டாவது சடைக்கண் சேதுபதியின் கி.பி.1637ஆம் ஆண்டுக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்த நீாக்கால்களைப் போன்று சிறிய அளவில் நீரை எடுத்துசசென்றும், குளம், குட்டை என்ற பகுதிகளைத் தடுக்கக் கூடிய சிறுகால்கள் நீர்க்கோர்வை என்று வழங்கப்பட்டன. இத்தகைய நிலப்பரப்புக்களையும், நீர் ஆதார வசதிகளையும் உடைய காணிகளையும் ஊர்களையும் சேதுபதி மன்னர்கள் அறக் கொடைகளாக வழங்கி உள்ளனர். இவை பெரும்பாலும சமுதாயப் பணிகளுக்கும் தெய்வீகப் பணிகளுக்குமாக சர்வ மான்யங்களாக வழங்கப்பட்டன என்பதை இந்தக் கல்வெட்டுக்களுடன் இவர்களது செப்புப் பட்டையங்களும் உறுதிப்படுத்துகின்றன. இயல்பாக மழை வளம் குன்றிய சேதுநாட்டில் மழை, வெள்ளம் மிகவும் அருமையாகப் போற்றப்பட்டு வீணாகாமல் வேளாண்மைக்கு முழுவதும் பயன்படுமாறு அந்த மன்னர்கள் கவனித்து வந்தனர். இதனால் நீர் ஆதாரங்களை பெருக்குதல் என்ற பணி சமுதாயப் பணிகளிலேயே மிகச் சிறப்பானதாக அமைந்திருந்தது. இதனை அடுத்து மக்கள் சமுதாயத்தின் கண்மாய்க் கரையில் ஏற்பட்ட குடியிருப்பு ஒன்று பரமக்குடி வட்டத்தில் பெருங்கரை என வழங்கப்படுவதை முன்னர்