பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EC)Յ சேதுபதி மன்னர் ஆனால் இந்தக் கல்வெட்டுக்களில் பல்லக்குச் சேர்வை செய்பவர்களுக்கும், பிராமண போஜனம் திருப்பணி அவசரம் ஆகியவைகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டதை இந்தக் கல்வெட்டுக்கல் தெரிவிக்கின்றன. - இத்தகைய நிலக்கொடைகளை சேதுபதி மன்னர்கள் மட்டுமல்லாமல் அவர்களது அதிகாரம் பெற்று சுயேட்சையாக செயல்பட்ட ஆளுநர்களும், சேர்வைக்காரர்களும் இந்த தானங்கள் வழங்கியதை இந்தக் கல்வெட்டுக்களில் காண்கின்றோம். திருமலை சேதுபதியின் சேர்வைக்காரர்களான சொக்கப்பன் சேர்வையும், கங்கையாடிய பிள்ளையும் முறையே கி.பி.1662, 1669 ஆகிய வருடங்களில் விரையாச்சிலை உலக விடங்கேஸ்வரர் ஆலயத்திற்கும், மேலையூர் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலுக்கும், ரெகுனாத கிழவன் சேதுபதியின் மகனும் ஆளுநருமான ரணசிங்கத் தேவர் கி.பி.1696ல் காட்டு பாவா சாகிபு பள்ளிவாசலுக்கும் அறக்கொடைகள் வழங்கி இருப்பது இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுக்கள் சேதுபதி மன்னர்களது ஆட்சியில் அதாவது கி.பி.1623 முதல் கி.பி.1897 வரை அந்த மன்னர்களால் பொறிக்கப்பட்டவையாகும். "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்ற மரபிற்கேற்ப இந்த சேதுபதி மன்னர்கள் சேதுநாட்டின் மக்களிடையே நிலவி வந்த இறை உணர்வை செழுமைப்படுத்தி அவர்களது சமுதாய வாழ்வில் முன்னேற்றம் காண மேற்கொண்ட சாதனைகளை அறிவிப்பனாக இவை அமைந்துள்ளன. இந்தக் கல்வெட்டுக்களிலிருந்து நமக்கு இரண்டு புதிய செய்திகள் கிடைக்கின்றன. அதாவது சேது நாட்டில் சைவத்தையும் வைணவத்தையம் மன்னர்கள் மக்களும் பல நூற்றாண்டுகளாக