பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OB சேதுபதி மன்னர் மதித்து வந்த சேது மன்னர்கள் அய்யனார் வழிபாட்டிற்காக உதவி வந்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. நமக்கு கிடைத்துள்ள வரலாற்றுச் செய்திகளின் படி கூத்தன் சேதுபதி மன்னர் (கி.பி.1622-1635) இத்தகைய அறக் கொடையை முதன் முறையாக தொடக்கி வைத்துள்ளார் அவர் அமைத்து உதவிய கூரிச்சாத்த ஐய்யனார் கோவில் இன்றும் இராமநாதபுரம் கோட்டை மேற்கு மதிலை ஒட்டி அமைந்து மக்களது வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்த நூலில் ஐய்யனார் ஆலய வழிபாட்டிற்காக கூத்தன்.சேதுபதி, திருமலை ரெகுநாத சேதுபதி, ராணி மங்களேசுவரி நாச்சியார் ஆகியோர் முறையே போகலூர், ஆலம்பட்டு, பூலாம்பட்டி ஆகிய ஊர்களில் கொடைகள் வழங்கி இருப்பதைக் காணலாம். மற்றும் இந்தக் கல்வெட்டுக்களில் இருந்து கிடைக்கும் இன்னொரு செய்தி சேதுநாட்டில் குமரக் கடவுளுக்கு என தனி கோயில் வழிபாடு கி.பி.18ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. சிவ பெருமானது இரண்டாவது மகனான கந்தனது பிறப்பு. வளர்ப்பு, வீரம், திருமணம் ஆகியன பற்றிய செய்திகள் பல புராணங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு இருந்தது என்றாலும் கி.பி.14, 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருப்புகழும், கி.பி.15ம் நூற்றாண்டில் தோன்றிய கந்த புராணமும் மக்களிடையே பரவலாக இடம் பெற்ற பிறகுதான் முருக வழிபாடு தமிழகத்தில் துவங்கியுள்ளது. சேதுநாட்டில் முருகக் கடவுளுக்கு திருக்கோயில் அமைத்தவர் குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி மன்னரது தளவாயாக பணியாற்றியவையிரவன் சேர்வைக்காரர் ஆகும். அவரது பிறந்த ஊரான இராமநாதபுரத்தை அடுத்த பெருவயல் கிராமத்தில் அவர் முருகக் கடவுளுக்கு அமைத்த திருக்கோயில் திருப்பணிக்கு சேதுபதி மன்னர் கலையனூர் பெருவயல் கிராமத்தை சர்வ மான்யமாக தானம் வழங்கியதை பெருவயல் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து இந்த மன்னர் இராமநாதபுரம் பாலசுப்பிரமணிய சாமி கோயிலுக்கும் பழனி வேலாயுத சுவாமிக்கும் குளவயல் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும்