பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1C) சேதுபதி மன்னர் காலச் சூழலில் அரசுகள் எழுவதும மறைந்து போவதும் சாதாரண நிகழ்வுகள் ஆகும். சேதுபதிகளின் ஆட்சி மறைந்து இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர்களது பேராற்றலையும் புகழ் வாழ்ககையும் பறைசாற்றக்கூடிய வரலாற்றுச் சின்னங்களும் தடயங்களும், ஆவணங்களும், இன்றும் நிலைத்து வந்துள்ளன. அவைகளில் இருந்து இந்த மன்னர்கள் ஆட்சியில் கி.பி.15ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரையான கால எல்லையில் அரசியல் சமுதாய மொழிப் புலங்களில் மிகப்பெரிய மாற்றங்களும், விளக்கங்களும், தமிழ் இனத்திற்கு ஏற்பட்டு வந்துள்ளன. இந்த இறுக்கமான நிலையில் தமிழர்களது மொழி, கலை, ஆன்மீகம், பண்பாடு ஆகியவைகளைப் புரந்து, காத்து, வளர்த்து வந்தவர்கள் இந்தச் சேதுபதி மன்னர்கள் என்பதை யாரும் மறுக்க (ՄԻԼԳաT5l, கி.பி.16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வணிக நோக்குடன் தமிழகத்திற்கு வந்தவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். நாளடைவில் இங்கு கிடைத்த முத்துக்களையும், சங்குகளையும், மிளகு போன்றவைகளையும் கொள்முதல் செய்து மேலை நாடுகளுக்கு அனுப்பி வைத்து பெரும் ஆதாயம் பெற்றதுடன் அமையாமல் தமிழக மக்களின் ஒரு பிரிவினரான பரவர் என்ற கடல்படு பொருள்களில் தொழில் செய்து வந்த மக்களைத் தங்களது புதிய சமயமாகிய கிறுஸ்துவ சமயத்திற்கு மதமாற்றம் செய்தனர். மேலும் அவர்களது மன்னரான போர்ச்சுகல்நாட்டு பிலிப்ஸ் மன்னரது குடிகளாகவும் அவர்களை மாற்றி வந்தனர். புனித இயேசு மதத்தொண்டர்களான பிரான்ஸிஸ் சேவியர், அந்தோணி கிரிமிநாடிஸ், ஜான் டி பிரிட்டோ, ராபர்ட் டி நொபிலி ஆகிய சமயத் தொண்டர்களது வாழ்க்கை வரலாறுகளே இதற்குத் தக்க சான்றுகளாகும். அப்பொழுது மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டிருந்த மதுரை நாயக்க மன்னர்கள் இந்த வேற்று மதத்தாாது சமய பண்பாட்டு