பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 கல்வெட்டுக்கள் சி Hı : சிறு கோயில்களின் நிர்வாகத்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட துறவி என்பது இதன் பொருள். வடமொழியில் பரதேசி என்றால் வேற்று நாட்டான் என்ற பொருளும் இந்தச் சொல்லுக்கு உண்டு. ஆனால் தமிழகத்தில் துறவிகளை பரதேசி என அழைப்பது உண்டு அவர்களில் நிர்வாகத்தை நடத்தும் தலைவர் என ஊர்ச் சபையினர் அல்லது தர்மகர்த்தாக்கள் நியமனம் செய்யப்பட்டவர் பரதேசி முத்திரை எனப்படுவர். பிரம்மதேயம் : தமிழகத்தின் ஆன்மீக செழுமைக்கு பாடுபட்டு வந்த, நான்மறைகளையும் கற்றுணர்ந்து மற்றவர்களுக்கும் பயிற்றுவிப்பவர்களும் திருக்கோயில்களில் வழிபாடுகளை முறையாக செயல்படுத்தி வருபவருமான அந்தணர்களுக்கு தமிழ் மன்னர்கள் வழங்கிய நிலக்கொடை பிரம்ம தேயம் ஆகும். (பிரம்மம் - பிராமணர் தேயம் - நாடு (அ) ஊர்) LIIGILE ஊரின் எல்லையை வரையறுத்து குறித்து பகுதியை கல்வெட்டுக்களில் புரவு என்ற சொல் குறிக்கின்றது. இன்றும் சேதுநாட்டின் சில பகுதிகளில் ஊர் எல்லைப் பகுதியை குறிப்பதற்காக புரவு என்ற இச்சொல் உலக வழக்கில் இருந்து வருகிறது. பூசைப்பற்று: சின்னஞ் சிறு கோயில்களில் தெய்வங்களுக்கு முறையாக அர்ச்சனை முதலிய வழிபாடுகளை மேற்கொண்டு வந்த