பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 கல்வெட்டுக்கள் ஆக்கிரமிப்புக்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏற்ற வலிமை அற்ற அரசர்களாக விளங்கி வந்தனர். இவர்களைப் போன்றே கி.பி.17ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களும், கி.பி.18ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் புகுந்து தமிழகத்தைப் பல நிலைகளிலும் அலைக்களித்து வந்தனர். இத்தகையதொரு நெருக்கடியான சூழ்நிலையில் வேற்று நாட்டவர்களது ஆக்கிரமிப்பு ஆயுத வலிமைக்கும் எதிராக சேது நாட்டு மறவர்களது தொன்மையான வீரத்திற்கும், கொடைக்கும் ஏற்ற காலமாக விளங்கியவர்கள் இந்த மன்னர்கள். இந்த மன்னர்களின் இறுதியானவரான முத்து இராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னர் ஆங்கிலேயரது ஏகாதிபத்தியக் கொள்கைக்கும் ஆக்கிரமிப்பு மனோபாவத்திற்கும் முட்டுக்கட்டையாக விளங்கிய காரணத்தினால் இவரை கி.பி.1795ல் சூழ்ச்சியால் சிறைப் பிடித்து திருச்சிக் கோட்டையிலும் பின்னர், சென்னைக் கோட்டையிலும் அவரது இறுதிக்காலம் வரை அடைத்து வைத்திருந்தனர். 24 ஆண்டுகளாக சிறைவாச முடிவில் இந்த மன்னரை அங்கேயே மரணமடையச் செய்தனர் என்பது வரலாறு. இந்தியத் திருநாட்டில் அந்தக் கால கட்டத்தில் எத்தனையோ மன்னர்கள் இருந்த போதிலும் குறிப்பாகத் தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவிதாங்கூர், கொல்லம், மைசூர் போன்ற அரசுகளின் அதிபதிகள் இருந்து வந்த போதிலும், ஆங்கில ஆயுத வலிமையை எதிர்த்த ஒரே மன்னர் இந்தச் சேதுபதி தான் என்பது வரலாறு விளக்கும் தனிப்பெறும் எடுத்துக் காட்டாகும். மற்றும் சமயத் துறையில் இந்த மன்னர்கள் ஆற்றியுள்ள சிறந்த தொண்டுகள் மிகப் பலவாகும். இந்த மன்னர்களது ஆட்சிக் காலத்தில் சேது நாட்டிலும், மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வேற்றுச் சமயங்களான, இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற சமயங்களில் செல்வாக்குப் பரவலாகத் தமிழகத்தில் தொடர்ந்து வந்த பொழுதும் தொன்மைக் குடியினரான சேதுபதி மன்னர்கள் தாம் பற்றி ஒழுகி வந்த சைவ சமயத்தின் செழுமைக்கும் வளர்ச்சிக்கும் மிகச் சிறப்பான