பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - - சேதுபதி மன்னர் இருந்ததில் வியப்பில்லை. இன்று காணப்படும் திருப்புல்லாணித் திருக்கோயிலில் கட்டுமானம் அனைத்தும் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னரால் இயற்றப்பட்டதாகும். ஆண்டுதோறும் பங்குனித் திங்களில் இந்த கோயிலில் பெருமாளுக்கு வசந்தவிழா நடைபெறுவதற்கும், அப்பொழுது பெருமாள் தேவியுடன் பவனி வருவதற்கான திருத்தேரையும், செய்துவித்து வழங்கியவர் இந்த மன்னரே ஆவார். மேலும் திருப்புல்லாணியை அடுதது அகத்தியர் குட்டம் கிராமத்தில் சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கும் மற்றும் கொத்தங்குளம், ஆதன்கொத்தங்குடி, இராமநாதபுரம், அபிராமம். இராஜசிங்கமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள பெருமாள் கோயில்களுக்குப் பல திருப்பணிகளைச் சேது மன்னர்கள் செய்துள்ளனர். இதனைப் போன்றே திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்கும் இதே மன்னர்கள் பல கட்டளைகளை ஏற்படுத்தி உள்ளனர். இந்த சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் கல்வி கற்பதற்கெனத் தனியாகப் பள்ளிகள் அமையவில்லை ஆயினும், திருக்கோயில்களே மக்களுக்கு கல்வி அறிவூட்டும் மையங்களாகவும், ஆடல், பாடல் கலைகளைப் பரப்பும், கலைக் கோயில்களாகவும் விளங்கி வந்தன. இந்தப் பணிகளை மேற்கொண்ட பெரிய மேளம் எனப்படும் நாதஸ்வரக்குழுக்களும் சின்னமேளம் எனப்படும் நாட்டியக் குழுக்களும் மற்றும் கோயில் விழாக்களை அழகும். பொலிவும் மிக்கதாக அமைப்பதற்காக கைவித்தாலம், அலங்காரப்பட்டர் என்ற அழகுக் கலைஞர்களும், அவர்களது பணிகளுக்காக வருட,_ மாத, நிவேதனங்களாகப் பொன்னும், பொருளும், வழங்கப்பட்டு வந்தன. இந்தக் கலைகளில் மிகச் சிறப்புற்று விளங்கியவர்களுக்கு ஜீவித மான்யங்களாகக் காணிகளும், காணிகள் நிறைந்த ஊர்களும் தர்மாசனங்களாகச் சேது மன்னர்களால் வழங்கப்பட்டு வந்தன. சேது மன்னர்களது இத்தகைய அரிய கொடைகளைக் குறிப்பிடும் மூன்று