பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள்= வந்தன. கி.பி.16, 17ஆவது நூற்றாண்டுகளில் தமிழகத்தில் "அன்பேசிவம்" "சிவமே இறைவன்" எனச் சைவ சிந்தனைகளை மக்களிடையே பரப்பித் தமிழுக்கும், தமிழ் மொழிக்கும், சைவ சமயத்தினருக்கும் சிறப்பான தொண்டுகளைச் செய்து வந்த, திருவாவடுதுறை, திருமடத்தை ஆதரித்துச் சமயப் பணி சிறப்பாகத் தொடர்வதற்கு அந்த மடாதிபதிகளுக்குப் பல ஊர்களைச் சேது மன்னர்கள் இராமநாதபுரம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, சீமைகளில் சர்வமான்யமாக வழங்கி உள்ளதை ஆவுடையார் கோவில், திருவாவடுதுறை மடம் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. மேலும் "நதியாம் விரிசலை நன்னகர் பொற்கோட்டை பதியாந் துறைசைப் பதிக்கு - விதியாகத் தானமிட்டான் சேதுபதி தாாணிதா னுள்ளளவும் ஊனமிலை பெந்த நாளும்" என்ற தனிப்பாடலும் சேது மன்னர் திருவாவடுதுறை மடத்திற்கு வழங்கிய தானங்களைச் சிறப்பித்துச் சொல்கிறது. மேலும் மணிமுத்தாறு ஆற்றுப் போக்கின் வடகரையில் அமைந்துள்ள அனுமந்தக்குடிகிராமம் சேது மன்னர்களது வலிமைமிக்க கோட்டைகளில் ஒன்று ஆகும். இந்தக் கோட்டையினைக் கைப்பற்றுவதற்காகத் தஞ்சை மராட்டிய மன்னர்கள் பலமுறை தாக்குதல்கள் நடத்தி தோல்வி கண்டனர் என்பது வரலாறு. இங்குள்ள குடிகளில் முக்கியமானவர்கள் சமண சமயத்தைச் சார்ந்தவர்கள். மிகச் சிறுபான்மையினரான இந்த மக்கள் வழிபட்டு வருகின்ற மழவநாத சுவாமிகள் திருக்கோயில் பராமரிப்புக்குத் திருமலை சேதுபதி மன்னர் அனுமந்தக்குடிக் கிராமத்தைத் தானமாக வழங்கியுள்ளார். இத்துடன் அமையாமல் இதே கிராமத்தில் உள்ள செய்யது முகம்மது புகாரி என்ற