பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 கல்வெட்டுக்கள்= - விட்டு இன்றைய இராமநாதபுரத்திற்கு மன்னரது தலைமை இடத்தை மாற்றி அமைத்ததும், இங்கே செவ்வக வடிவில் சுமார் 4 மைல் சுற்றளவில் கல்லாலான கோட்டையை அமைத்தும் சேது மன்னரது அவைக் களமாகப் பயன்படுவதற்கு இராமலிங்க விலாசம் என்ற கொலு மண்டபத்தையும் அமைத்து உதவியவரும் இந்த சேது மன்னரது நல்லமைச்சரான சீதக்காதி மரைக்காயரே ஆவார் என்பதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.' மேலும் வானத்தின் பொழிவை மட்டும் பருவகாலத்தில் பெற்று வளமை பெற்று வந்த சேது நாட்டில் பன்னாட்டுப் பண்டங்களும், கடல்வழி வியாபாரப்பெருக்கமும், சீதக்காதி மரைக்காயரது கடல்கடந்த பன்னாட்டு வணிகம் உதவியாக அமைந்தது. வங்கக் கடலின் சங்கும் வங்காள நாட்டுக் குடிமக்களுக்கும், மேலை நாடுகளுக்கும், நெல்லும், கைத்தறித் துணியும், சங்கும், இலங்கை, காரைக்கால், பாண்டிச்சேரி, பரங்கிப்பேட்டை, போன்ற நெடுந்துரக்கடல் பட்டினங்களுக்கும் போய்ச்சேர்ந்தன. கேரள நாட்டு மிளகும், அரபு நாட்டுக் குதிரைகளும், கீழ்த் திசை நாட்டு பட்டு, சந்தனம், அம்பர், செம்பு ஆகிய பொருள்களும், சேதுநாட்டு சந்தைகளில் இடம் பெற்றன. இவ்விதம் சமயப்பொறையைப் பேணிவந்து சேது நாட்டு சமய ஒற்றுமையையும், அமைதியையும் நிலவச் செய்து வந்தனர் இந்த மன்னர்கள். இவர்களது வழியினரான முத்து விஜய ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக் காலத்தில் ஓரியூரில் கிறிஸ்தவ சமயத் தொண்டரான புனித அருளானந்தருக்கு நினைவு ஆலயம் எழுப்பிய பொழுது இந்த மன்னரது சகோதரர் முத்து வையிரவநாத சேதுபதி இந்த விழாவில் கலந்துகொண்டு செங்கல் சுமந்து சென்று கால்கோல் விழாவிற்குச் சிறப்பு செய்தார் என்பது வரலாறு." இந்த மன்னரைத் தொடர்ந்துசேதுபதி மன்னர்களாக குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதியும், அவரது மகனான சிவக்குமார ரெகுநாத சேதுபதியும் முறையே கீழ்க்கண்ட இஸ்லாமிய துறவிகளது புனித அடக்க இடங்களுக்குப் பல கிராமங்களைத் தானம் 1. Raja Ram T. - Manual of Ramnad Samasthanam (1891) 2. Fr. Salilere - The Red Sand (1953) Page