பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - =சேதுபதி மன்னர் அளித்துள்ளதை அவர்களது செப்பேடுகள் சான்றுகளாக அமைந்துள்ளன.' 1. இராமேஸ்வரம் ஆபில், காபில் தர்காவிற்குப் பக்கிரிபுதுக்குளம் என்ற கிராமம் தானம் வழங்கப்பட்டது. - 2. ஏர்வாடியில் அமைந்துள்ள சுல்தான் செய்யது இபுராஹிம் (வலி) அவர்களது புனித அடக்கவிடம் பராமரிப்புக்காக மாயாகுளம் என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டது. 3. இராமநாதபுரம் கோட்டையில் அமைந்துள்ள புனித ஈசா சாகிப் அடக்கவிடம் பராமரிப்புக்காக கிழவன் ஏரி தானமாக வழங்கப்பட்டது. 4. கீழக்கரையில் அமைந்துள்ள புனித சதக்கத்துல்லா அப்பா அவர்களது அடக்கவிடம் பராமரிப்புக்காக தில்லையேந்தல் என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டது. 5. இராமநாதபுரத்தின் கிழக்கே அமைந்துள்ள புனித இலத்தீப் பாதுசா அடக்கவிடத்திற்கு கிடாத்திருக்கை கிராமம் தானமாக வழங்கப்பட்டது. இந்த மன்னர்களது பட்டியலில் இறுதியாக இடம் பெற்றுள்ள முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மன்னர் வெளிப்பட்டினம் குத்பு சாஹிபு புனித அடக்க இட கந்தூரி விழாவிற்கு ஆண்டுதோறும் எட்டுக்கலம் அரிசியும், இரண்டு கிடாய்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். மேலும் இந்தப் புனிதரது அடக்க இடத்திற்கு தீபதுப தர்மத்திற்காக நாள் ஒன்றுக்கு அரைப்பணமும் நிவேதனமாக அளித்து வந்தார். மேலும் முத்துப்பேட்டையில் உள்ள சர்வேஷ்வரன் தேவாலயத்திற்காக முத்துப்பேட்டை கிராமத்தையும் தெஞ்சி ஏந்தல் என்ற கிராமத்தையும் சர்வமான்யமாக வழங்கினார். சேது நாட்டு சிறுபான்மையினரான சமணர், இஸ்லாமியர், கிறிஸ்துவர் ஆகிய 1. எஸ்.எம். கமால் Dr. - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1993) - பக்கம்