பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கல்வெட்டுக்கள்= கவிராயர் என்பவர் இந்த மன்னனின் மீது ஒருதுறைக் கோவை என்ற காப்பியத்தை நாணிக் கண் புதைத்தல் என்ற ஒரே துறையில் நானுறு பாடல்களில் சேது மன்னரது பெருமைகளைச் சிலேடையுடன் அமைத்துப் பாடினார். கோவை இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த நூலில் கொடை நாயகரான திருமலை சேதுபதி மன்னர் அந்தப் புலி க்கு பதினாயிரம்பொற்காசுகள் வழங்கிச்சிறப்பித்ததுடன் அந்தப் புலவர் வாழ்ந்து வந்த பொன்னாங்கால் என்ற ஊரினை அந்தப் புலவருக்குச் சர்வ மான்யமாக வழங்கினார். இதே மன்னர் இன்னொரு புலவரான அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்ற பெரும் புலவருக்கு அந்த மன்னர் மீது தள சிங்கமாலை என்ற இலக்கியத்தை இயற்றியதற்காக மிதிலைப்பட்டி என்ற கிராமத்தையும், இன் ஏழு கிராமங்களையும் தானமாக வழங்கி மகிழ்ந்தார்." இந்த பெரும் புலவரைத் திருமலை சேதுபதி மன்னரை அடுத்து சேதுபதியான கிழவன் என்ற ரெகுநாத சேதுபதியும் மிகச் சிறப்பாக வரிசைகள் பல வழங்கிச் சிறப்பித்தார் என்பது வரலாறு. திருமதுர் என வழங்கப்படும் நயினார் கோவிலைச் சார்ந்த தலமலை கண்ட தேவர் என்ற அந்தகக் கவிராயர் மருதூர் அந்தாதி என்ற இலக்கியத்தைப் படைத்ததற்காகப் பலவாறு இந்த மன்னரால் சிறப்பிக்கப்பட்டார். பிற்காலத்தில் நயினார் கோவில் தலத்தைப் பற்றிய வடமொழி இலக்கியத்தை மருதூர் புராணம் என்ற தமிழ் இலக்கியமாக இயற்றிய எட்டையாபுரம் கருத்தமுத்துப் புலவர் என்பவரை மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் தமது பட்டத்து யானையில் அமர வைத்து நகர்வலம் வருமாறு செய்ததுடன் பல அன்பளிப்புகளை வழங்கி ஆதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதே மன்னர் தங்களது அரச பரம்பரைக்கு தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் கடமை உண்டு என்பதை அறிஞர் உலகம் அறியும் வண்ணம் இராமநாதபுரம சமஸ்தானத்தின் பெரும் புலவரான 1. Imam Fair Register 2. Inam Fair Register