பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சேதுபதி மன்னர் இரா.இராகவ ஐயங்கார் என்பவரை மதுரையில் பல்லக்கில் அமரச்செய்து பல்லக்கு போகிகளுடன் பாஸ்கர சேதுபதி மன்னரும் அந்த பல்லக்கினைச் சுமந்து மரியாதை செலுத்தினார் என்றும் இந்த நிகழ்ச்சியை 2.11.1901 அன்று ஆவணம் மூலம் பதிவு செய்துள்ளார். இவை மிகவும் அரிய தமிழ்ப்பணியாகும். இராமாவதாரம் பாடிய கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு வாரங்கல் நாட்டு மன்னரான பிரதாபருத்திரன் என்பவர் அடைப்பம் பணி செய்தார் என்ற வரலாற்றுச் செய்திக்கு ஒப்பான நிகழ்ச்சி. கிழவன் ரெகுநாத சேதுபதி மன்னரைத் தொடர்ந்துசேது நாட்டின் மன்னரான முத்து விஜய ரகுநாத சேதுபதி மிகச் சிறந்த சிவ பக்தராக ஓவியம், இலக்கியம் போன்ற துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இராமநாதபுரம் சேது மன்னர்களது அத்தாணி மண்டபமாக விளங்கி வந்த இராமலிங்க விலாசம் அரண்மனை சுவர்கள் முழுவதையும் பலவிதமான இலக்கிய சமூக வரலாற்று ஓவியங்களை வரையச் செய்து அழகுபடுத்திய அரும்பணியை மேற்கொண்டவர். இவரது ஆட்சியின் மாட்சியைப் புலப்படுத்தும் வண்ணம் மதுரை சொக்கநாதப் புலவர் பணவிடு தூது என்ற சிற்றிலக்கியத்தையும், இராமேஸ்வரம் இறைவர் இராமநாதசுவாமி மீது தேவை உலா என்ற இலக்கியத்தையும் பாடியதற்காக இந்த மன்னர் புலவருக்குப் பெரும் பொருள் வழங்கிச் சிறப்பித்தார். மேலும் தமிழகமெங்கும் அப்பொழுது பரவலாகப் பயிலப்பட்டு வந்த கம்பராமாயணத்தை மற்றவரும் எளிதாகப் படித்து அறிந்து கொள்ளும் பொருட்டு ஆங்காங்கே கம்ப இராமாயணச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்த ஏற்பாடு செய்தார். இராமயாணச் செய்திகளை உள்ளத்தைப் பிணிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்லி வந்த மேலச் செல்வனூர் சர்க்கரைப்புலவர் என்பவரது புலமையைப் பாராட்டி அந்தப் புலவருக்கு அரசவை மண்டபத்தில் பொன்நெட்டி மாலை ஒன்றினைப் பரிசளித்ததுடன் திருவாடாணை வட்டத்தில் உள்ள இரு கிராமங்களையும் அந்தப் புலவருக்கு சர்வ மான்யமாக வழங்கிச் சிறப்பித்தார் சேதபதி மன்னர்களின் தன்னரசு நிலையினை