பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கல்வெட்டுக்கள் – - கி.பி.1795-ல் சிதையுமாறு செய்த ஆங்கிலேயரது ஆட்சி பரவுவதற்கு முன்னர் இருந்த முத்து இராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னர் கமுதை நாட்டில் உள்ள மன்னார்ரெட்டி என்ற புலவரின் புலமைத்தனத்திற்கு இரு கிராமங்களை பரிசாக வழங்கினார் என்ற செய்தி இராமநாதபுரம் சமஸ்தான நில மான்யக் கணக்கில் பதிவு பெற்றுள்ளது. மேலும் இந்த மன்னர் எமனேஸ்வரம் மீர், ஜவ்வாதுப் புலவரைத் தமது அரசவைப் புலவராக நியமித்ததுடன் அவருக்கு முதுகுளத்தூர் வட்டத்தில் வண்ணவயல், சுவாத்தன் என்ற இரு ஊர்களையும், சர்வமான்யமாக வழங்கினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்விதம் தமிழகத்தில் மிகவும் இறுக்கமான சமுதாயச் சூழ்நிலையில் தமிழ்ப் புலவர்களைத் தேடித் துறந்து போற்றி அவர்களது தமிழ்ப்பணி வறுமையினால் பாதிக்கப்படாமல் அவர்கள் வளமுடன் வாழ்ந்து தமிழ் இலக்கியங்களைப் படைத்தளிப்பதற்குப் பருவ மழையாக அமைந்தவர்கள் சேதுபதி மன்னர்களே என்றால் அது மிகையாகாது. தொடர்ந்த அந்நியரான ஆங்கியலேயரது ஆட்சி தமிழகத்தை சூழ்ந்து நின்ற போதும் தமிழ்ப்புலவர்களது வாழ்வு சீர்குலைந்து சிதைந்து நின்ற பொழுது பாஸ்கர சேதுபதி மன்னரும் அவரது சகோதரரான வள்ளல் பாண்டித்துரைத் தேவரும் தமிழ்ப் புலவர்களுக்குப் பொன்னும், பொருளும் வழங்கி ஆதுரத்துடன் தமிழ்ப் புலவர்கள் அனைவரையும் தேடிப் பிடித்துத் தமிழ்மொழி வரலாற்றிலேயே முதன் முறையாக மதுரைத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பின் கீழ் ஒன்றுபடச் செய்தனர். அவர்கள் வசம் இருந்த தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகள் அனைத்தையும், திரட்டி ஆய்வு செய்து தொகுத்து அவைகள் முதன் முதலாக அச்சில் பதித்துத் தமிழ் மக்களிடையே பவனி வரச் செய்தனர். இத்தகைய அரிய பெரும் பணிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி, அவரது தமயனார் வள்ளல் பொன்னுச்சாமித் தேவர். மன்னர் பாஸ்கர சேதுப்தி, அவரது தமயனார் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் என்ற நால்வரையும், தமிழ் இலக்கிய உலகம்