பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 -- சேதுபதி மன்னர் என்றுமே மறக்க முடியாது. யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலரைக் கொண்டு சைவ சாத்திர நூல்களை வள்ளல் பொன்னுச்சாமித் தேவர் அவர்கள் பதிப்பித்தார். தமது தந்தையின் பணியினைத் தொடர்ந்து வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மதுரை புலவர் சபாபதி பிள்ளை என்பவரைக் கொண்டு எஞ்சிய சைவ சமய நூல்களைப் பதிப்பித்து உதவினார். மன்னர் முத்துராமலிங்க சேதுபதியும், அவரது மகன் மன்னர் பாஸ்கர சேதுபதியும், மூதறிஞர் உ.வே.சுவாமிநாத ஐயர் அவர்களது பதிப்புப் பணியைப் பாராட்டி பொருள் உதவி செய்ததின் காரணமாக புறநானூறு. சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி என்ற பெரும் இலக்கியப் படைப்புக்கள். தமிழ் மக்களிடையே முதன் முதலாக அச்சுப் படிகளாக உலவி வருமாறு செய்தனர். மேலும் அபிதான சிந்தாமணி என்ற கலைக்களஞ்சியமும், மற்றும் கலிங்கத்துப்பரணி, முத்தொள்ளாயிரம், திருக்குறள் ஆகிய அரிய இலக்கிய படைப்புகளை வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் நிறுவிய மதுரை தமிழ்ச்சங்கம் வாயிலாக வெளியிடப்பட்டன. சிவகாசி கந்தசாமிப்புலவர், சேத்துர் சுப்ரமணியக் கவிராயர், சோழவந்தான் அரசன் சண்முகனார். எதிர்க்கோட்டைதிரு நாராயண ஐயங்கார், நாகூர் குலாம் காதிர் நாவலர், பழனி கவிச்சிங்க மாம்பழக் கவிராயர் போன்ற பெருந்தமிழ்ப் புலவர்களைத் தமிழ் உலகம் அறியுமாறு செய்தவர்கள் இந்த நன் மக்களே ஆவர். வறுமையில் ஏங்கித் தவித்த தமிழ்ப்புலவர்களுக்கு வங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள் போல அன்றைக்கு அன்ன தாதாக்களாக விளங்கி தமிழையும், தமிழ்ப்புலவர்களையும், தொடர்ந்து போற்றியவர்கள் சேதுபதி மன்னர்களும் அவர் தம் வழியினரும் ஆவர். தமிழ் இலக்கியப் படைப்புகள் வருவதற்கு ஊக்குவித்ததுடன் இவர்களது பணி நிறைவு பெறவில்லை மாறாக தமிழகத்தில் பட்டி தொட்டிகளில் வீட்டுப் பரன்களில் கரையானுக்கு இரையாகி எஞ்சி நின்ற தமிழ் இலக்கியச் சுவடிகள் அனைத்தையும் தேடித் திரட்டியவர்களும் அவைகளை மதுரைத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பினைத் தமிழக வரலாற்றில் முதன் முதலாக 14.9.1901ல்