பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 கல்வெட்டுக்கள் - நிறுவியவர்களும் அந்தச் சங்கத்தின் வழியாகத் தமிழ் இலக்கியங்களை அச்சில் வெளிக் கொணர்ந்த அரிய தொண்டினைச் செய்தவர்களும் சேதுபதி மன்னர் மரபினரே ஆவர். மேலும் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் இதழ்கள் வெளிவராத நிலையில் நாகை நீலலோசனி, மதுரை ஞானபானு, விவேக் பானு, போன்ற இதழ்கள் முறையாக வெளிவருவதற்கு பொருள் உதவி செய்தவர்களும் சேது மன்னர்களே ஆவா. மற்றும் தமிழ் மொழியின் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிய சான்றோர்களையும், இசைக் கலைஞர்கள், நாட்டியம் ஆகிய துறையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உலவி வந்த கலைஞர் பெருமக்களை ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரிக் கலைவிழாவில் கலந்து கொள்ளச் செய்தனர். மேலும் அவர்களது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பரிசுகளையும் பொற் பதக்கம், (மஹ்தாபி என்ற வட சொல்லின் தமிழாக்கம் சிறந்த பொன்னாலான இழைகளினால் நெய்யப்பட்ட பட்டாடையின் பெயர்) மாதாவி பட்டாடைகளையும் அவர்களுக்கு அணிவித்தும் கனகாபிஷேகம் செய்தும், கண்னும் கருத்தும் குளிரக் கண்டு மகிழ்ந்தவர்கள் சேது மன்னர்கள். இத்தகைய நவராத்திரி கலை விழா ஒன்றில் கி.பி.1897ல் கலந்து கொண்டு பொன்னாலான காப்புகளும், மாதாவி பட்டாடையும் பெற்று மகிழ்ந்த நிகழ்ச்சியை தமிழ்த்தாத்தா ட்ாக்டர். உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் "என் சரித்திரம்" என்ற தமதுவாழ்க்கை வரலாற்று நூலில் இடம் பெறச் செய்து இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இசைக் கலைஞர்கள் மகா வைத்யநாத ஐயர்.பட்டணம் சுப்ரமணிய ஐயர் திருக்கோடிக்கா கிருஷ்ண் ஐயர், மைசூர் வினை வித்வான் சேசன்னா, கும்பகோணம் நாட்டிய நங்கை பானுமதி, புதுக்கோட்டை மாமுண்டியாப்பிள்ளை, குன்னக்குடி கிருஷ்ண ஐயர், திருவாவடுதுறை ராஜ ரெத்தினம் பிள்ளை, பரிதிமால் கலைஞர் சூர்ய நாராயண சாஸ்திரி, பூச்சி, சீனிவாச ஐயங்கார், போன்ற சிறந்த மேதைகள் இராமநாதபுரத்தில் சேதுபதி அரசர்களால்