பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2호 கல்வெட்டுக்கள் –=- — ஆங்கிலத்திலும், பெரும் புலமை பெற்றிருந்தார். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த நாட்டிலே ஆங்கிலக் கவிதைகளைப் புனைந்து பெரும் புகழ்பெற்ற கவியரசர் ரவீந்தரநாத் தாகூர் வட நாட்டில் விளங்கியதுபோன்று தென்நாட்டில் ஆங்கிலக் கவிஞராக விளங்கியவர் இந்தத் திருமகனார். இவ்விருவரது பெரிய தந்தையும், வள்ளலுமான பொன்னுச் சாமி தேவர் அவர்கள் தமிழில் பெரும் புலவராக விளங்கியது போன்று தமிழ் இசையிலும் தனி இடத்தைப் பெற்று விளங்கினார். கி.பி.1862லேயே தாம் இயற்றிய பல கீர்த்தனைகளின் தொகுப்பினை அச்சேற்றி வெளியிட்டுள்ளார். இவரது அருமைப் புதல்வரான பாண்டித் துரைத் தேவர் அவர்கள் சைவ சித்தாந்தத்திலும், தமிழ் இலக்கியங்களிலும், மிகச் சிறந்த தேர்ச்சியும் புலமையும் பெற்றிருந்ததுடன், பல சிற்றிலக்கியங்களையும் யாத்துள்ளார். சிவஞானபுரம் முருகன் மீது அவர் பாடியுள்ள "காவடிச் சிந்து" மிகவும் பிரபலம் பெற்றுள்ளது. தமது பள்ளித் தோழரான சீனிவாசனை மிகச் சிறந்த இசைப் புலவராக மாற்றி, இராமநாதபுரம் சமஸ்தான சங்கீத வித்வானாகவும் நியமனம் பெறும்படி செய்தார். பாண்டித்துரைத் தேவர் அவர்களே தமிழ் இசையில் தனியாத ஆர்வம் கொண்டவர். இளமைப் பருவத்திலேயே பல சங்கீத அரங்குகளில் பாடிய பெருமை இவருக்கு உண்டு. இவ்விதம் சேதுபதி மன்னர்களும், மரபினரும், தமிழ் வள்ளல்களாக விளங்கியது மட்டுமல்லாமல் அவர்களே பெரும் புலவராக அமைந்து பல தமிழ் இலக்கியங்களைச் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் வரை படைத்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும். தமிழகத்தில் வாழ்ந்த எந்த அரசரும, அரச மரபினரும் செய்யாத சிறப்பான சாதனைகளை செய்தவர்கள் இந்த தொன்மைக் குடியினர். சேதுபதிகள் என்ற பெயர் ஆன்மீகத்தில் உரிய பெயராக தமிழ் வளர்ச்சியின், மதிப்பீடாக, கொடை உள்ளத்திற்கு குறியீடாக விளங்கிவருவதால் அவர்களது கடந்த கால சாதனைகளைச்