பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - சேதுபதி மன்னர் l இயல் 5 | இராமேஸ்வரம் திருக்கோயில் கல்வெட்டு இந்தக் கல்வெட்டும் இராமேஸ்வரம் திருக்கோயிலைச் சார்ந்ததாகும். இதனை வெட்டுவித்தவர் சின்ன உடையான் சேதுபதி என்ற மன்னராகும். இதன் காலம் கி.பி.1447. இராமேஸ்வரம் திருக்கோயிலின் பயன்பாட்டிற்காக ஏழு கிராமங்களை இராமேஸ்வரம் திருக்கோயிலுக்குச் சர்வ மான்யமாக சேதுமன்னர் வழங்கியது பற்றிக் குறிப்பிடுவது ஆகும். இந்தக் கல்வெட்டின் வாசகமும், கடலிலிருந்து வீசும் காற்றின் உப்புத் தன்மையில் அழிந்து விட்டதால் இந்தக் கல்வெட்டின் முழு வாசகத்தையும் படித்து தெரிந்துகொள்வதற்கு இயலவில்லை. ஆனால் கி.பி.19ஆம் நூற்றாண்டில் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வருகை தந்த வரலாற்றுப் பேராசிரியர் பெர்கூசன் என்பவர்