பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் இயல் 6 இராமேஸ்வரம் திருக்கோயில் - கல்வெட்டு கி.பி.1603லிருந்து போகலுரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த சேதுபதி மன்னர்களில் கூத்தன் சேதுபதி இரண்டாவது மன்னர் ஆவார். இந்த மன்னரது ஆட்சிக் காலம் மிகவும் குறுகியதாகும். கி.பி.1622 முதல் 30 வரை ஒன்பது ஆண்டுகளே நீடித்த பொழுதிலும், இந்த மன்னரது இராமேஸ்வரம் திருக்கோயில் திருப்பணிகள் மிகவும் போற்றத்தக்கவை ஆகும். இராமேஸ்வரம் கோயிலின் கருவறையை ஒட்டி நிர்மாணிக்கப்பட்டுள்ள மகாமண்டபமும், அதனை அடுத்து அமையப்பெற்றுள்ள முதலாவது பிரகாரமும் இந்த மன்னரால் அமைக்கப்பட்டவை எனக் கருதப்படுகிறது. இந்தப் பிரகாரத்தின் மேற்குச் சுவரில் வெளிப்புறமாக வெட்டுவித்துள்ள கல்வெட்டே இதற்குச் சான்றாகும். இந்தக் கல்வெட்டில் ராமநாத சுவாமிக்கு நட