பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பவெட்டுக்கள்= - - - - – 5. பூறி உடைய நாயனார் சேதுபதி காத்த தேவர் 7. கட்டி முகிழ்ப்பித்தார் உ. சதா சேருவை சேதுபதி சீமையில் பெரும்பாலான கிராமங்களில் காவல் தெய்வமான ஐய்யனாருக்கு கோயில் அமைத்து வழிபடும் முறை நீண்ட நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. காரணம் கிராமத்தில் அம்மை, வாந்திபேதி போன்ற நோய் நொடிகளும், திருட்டு, கொள்ளை போன்ற பொது குற்றச்செயலும் அந்தந்த கிராமங்களில் நடைபெறாமல் இந்த ஐய்யனார் கண்காணித்து தடுத்து வருகிறார் என்பது கிராம மக்களது உறுதியான நம்பிக்கை. அதனால் ஆண்டு தோறும் துறவி எடுப்பு என்ற விழாவினை கிராம மக்கள் ஐய்யனாருக்கு ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். ஹரிஹர புத்திரனான ஐய்யனார் சில ஊர்களில் சாஸ்தா என்றும் சாத்தனார் என்றும் வழங்கப்படுகிறார். சேது மன்னர்களது ஆட்சியில் இந்த ஐய்யனார் வழிபாடு அரசு ஊக்குவிப்புப் பெற்று இருந்ததற்கு இந்தக் கல்வெட்டு சிறந்த சான்றாகும்.

  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு.