பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் l இயல் 9 | முழக்கோல் கல்வெட்டு தமிழக மக்களின் இறைநம்பிக்கையையும் வழிபாட்டு முறைகளையும் தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டும் வண்ணம் ஆங்காங்கு திருக்கோயில்களும், திருமடங்களும், மண்டபங்களும், நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவைகளில் மிகப்பெரும்பாலானவற்றில் இந்த நிர்மானங்களை அமைத்தவர்கள், நிர்மாணிக்க உதவிய கல்தச்சர்கள் பற்றிய விவரங்கள் காணப்படுவதில்லை என்றாலும் சில அமைப்புகளில் மட்டும் நிர்மாணித்தவர்களது திருவுருவங்கள் இந்த அமைப்புக்களின் கல் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தத் திருக்கோவில்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் அறக்கொடை, நிலக்கொடை, பொன்னாலான அணிகலன்கள் பற்றிய செய்திகளும் சில கோவில் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.