பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சேதுபதி மன்னர் l இயல் 10 | முதலூர் கல்வெட்டு கூத்தன் சேதுபதி கி.பி.1630ல் ஆண் வாரிசு இல்லாமல் இயற்கை எய்தினார். சேது மன்னர் பதவிக்கு அவரது தம்பியும், அவரது தந்தையின் பெயரை உடையவருமான சடைக்கன் என்ற தளவாய் சேதுபதி சேது நாட்டின் மன்னரானார். இவரது ஆட்சிக்காலம் கி.பி.1630-1645 வரை ஆகும். தளவாய் என்பது தெலுங்கு மொழியில் சேனைத்தலைவர் என்ற பொருளைத் தருவது. முதலாவது சடைக்கன் சேதுபதி மதுரை நாயக்க மன்னர் முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கருடன் நெருக்கமான நட்பு கொண்டு இருந்ததுதுடன், மதுரை மண்டலத்தில் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கருக்கு எதிரான கிளர்ச்சிகளையும், குறிப்பாகத் திருப்பத்துர் வட்டம் பட்டமங்கலம் பகுதியில் எழுந்த கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கினார். மேலும் அந்தப் பகுதியில் இருந்து நாயக்க மன்னருக்குச் செலுத்தப்பட வேண்டிய - இறையையும் ஒழுங்காகச் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இந்த