பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


→ சேதுபதி மன்னர் கிராமமும், ராஜ சிங்கமங்கலம் பெரிய கண்மாய் அருகில் அமைந்துள்ள இராமநாத மடை இரகுநாத மடை என்ற மடைகளின் பெயரால் அங்கே இரு கிராமங்கள் ஏற்பட்டு இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

"வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயர, கோல் உயரும்" என்ற பழம் பாடலுக்கு ஏற்ப நாட்டின் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டிருந்த குடிமக்களுக்கு நீர்ப்பாசன வசதிகளைச் செய்து கொடுப்பது சேது மன்னரது கடமையாக இருந்தது. குறிப்பாக சேது நாட்டில் வைகை, கிருதுமால், மணிமுத்தாறு, தேனாறு போன்ற சிறு நதிகள் அமைந்து இருந்தாலும், அவைகளும் கார் காலத்து மழைப் பொழிவினையை ஆதாரமாகக் கொண்டு இருந்தன. மேலும் சேதுநாட்டின் மிகப்பெரும்பாலான பரப்புமானாவாரி (வான்மாரி என்ற சொல்லின் திரிபு) நிலமாக அமைந்திருந்தன. இவைகளைக் கருத்தில் கொண்ட தளவாய் சேதுபதி மன்னர் தமது நாட்டின் குடிமக்களுக்கு நீர் ஆதாரங்களைப் பெருக்கும் பணியில் ஈடுபட்டார். ஆங்காங்கு ஆற்றுப் போக்கிலும் தாழ்வான பகுதிகளிலும் அணைகளை எழுப்பி மழை நீரைத் தேக்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்தார். இவைகள் கண்மாய்கள் என்றும், ஏந்தல்கள் என்று அழைக்கப்பட்டு வந்தன. இவைகளுக்கு நீரினைக் கொண்டு செல்லும் கால்வாய்கள் கால்கள் என்றும், அவைகளினால் கொண்டு சேர்க்கப்பட் வெள்ள நீர் மிகுதியாகத் தேங்கும் பொழுது அவைகளைக் கண்மாய்க் கரைக்கு குந்தகம் இல்லாமல் வெளியேற்றுவதற்கான ஏற்பாடாக"தான் போதிக கால்களையும்" அமைத்து உதவினார். இந்த மன்னரது தந்தையார் கூத்தன் சேதுபதி வைகை நீரினை வறண்ட முதுகுளத்தூர் பகுதிக்கு எடுத்துச்செல்ல அமைத்த நீண்ட கால்வாய் (கமுதக்குடிக்கு, அருகில் வைகை ஆற்றிலிருந்து தெற்கே பிரிந்து செல்கிறது) இந்தக் கால் "கூத்தன் கால்" என்று இன்றும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்வெட்டு அமைந்துள்ள ஊர் -