பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் l && 11 | திருவாடாணைக் கல்வெட்டு இரண்டாம் சடைக்கண் சேதுபதி என்ற தளவாய் சேதுபதியின் ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் கிடைத்த இரண்டாவது கல்வெட்டு இது. இந்த மன்னரது பிரதிநிதியான திருமலையன் என்பவர். சேதுபதி மன்னருக்காக இந்தக் கல்வெட்டினை வரைந்துள்ளார். இது திருவாடானை திருக்கோயிலின் ராஜ கோபுரத்தின் வலப்புற மதிலில் பொறிக்கப்பட்டுள்ளது. சக ஆண்டு 1557 - தை மாதம் 14ல் திருவாடானையில் எழுந்தருளியுள்ள ஆதி ரத்தினேசுவரர் சுவாமிக்கு அபிஷேகம், திருநீறு. மாலைகள், தணிகை, பிரசாதம் ஆகியவைகளுக்காக கிராமம்தோறும் ஒரு பணமும், ஒரு காசும், ஒரு கல நெல்லும் குடிமக்கள் கொடுக்க வேண்டும் எனக் கட்டளையிட்ட அறிவிப்பினை இந்தக்