பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 - - - - சேதுபதி மன்னர் இறைவர் ஆடானை நாயகர் என்றே பாடியுள்ளனர். ஆனால் தற்பொழுது இந்த இறைவன், இறைவியின் பெயர் ஆதி ரத்தினேசுவரர் என்றும், அம்பிகை சிநேகவள்ளி என்றும் வழங்கப்பட்டு வருகிறது. இது 17, 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்பகுதி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திய நாயக்க மன்னர்களது தெலுங்கு மொழியின் தாக்கம் ஆகும். இந்தக் கல்வெட்டின் ஆங்கில ஆண்டு கி.பி.1635 ஆகும். இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.' 1. "ஸ்வஸ்தியூரீ சகாத்த 2. In 1557 3. இதன் மேல் செல்லாநின் 4. ற யுவ u தை மீ 14ல் 5. பூறுவ பட்சத்தில் 6. பெளறுணையும் ஆ 7. ச நட்சத்திரமும் 8. பெற்ற புண்ணிய கா 9. லத்தில் சுவாமி ஆ 10. டானை நாயகற்கு 11. சேதுபதித் தேவர்