பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՅ கல்வெட்டுக்கள்= —- தானமாக வழங்கியுள்ள ஊரின் பெயர் தெரியவில்லை என்றாலும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெருநான்கு எல்கையிலிருந்து இந்த ஊர் தற்போதைய மாயாகுளம், சின்ன மாயாகுளம் என்ற கிராமங்களாக இருக்க வேண்டும் என அறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டில் கிழக்கு எல்லையாக இயேசு கோவில் என்ற சொல் காணப்படுகிறது. இது இன்றும் கீழக்கரை நகரின் மேலத் தெருவில் பன்னாட்டார் கோவில் என வழங்கப்படும் தேவாலயம் ஆகும். இந்த தேவாலயம் கி.பி.16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிறித்துவ சமயப் பணியை மேற்கொண்டு இருந்த பிரான்ஸிஸ் சேவியர் என்ற போர்ச்சுக்கல் நாட்டுப் பாதிரியாரால் கட்டுவிக்கப்பட்டது. பன்னாட்டார் என்பது மன்னார் வளைக்குடாவின் கிழக்குக் கரையில் வாழ்ந்து வந்த மீனவரின் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகும். ஆனால் தற்பொழுது இந்தப் பிரிவினர்களது குடி இங்கே இல்லை. மேற்கு எல்லையாக குறிப்பிடப்பட்டு இருக்கும் காளலிங்கம் கோயிலும் இன்று இல்லை. ஆனால் அதே எல்கையாகக் குறிப்பிடப்படும் பள்ளியார் முனை முந்தல் இன்றும் உள்ளது. முந்தல் என்பது பொதுவாகக் கடற்கரையின் வில் ஆரம் போன்ற வளைவான பகுதியைக் குறிப்பதாகும். கடல்நீர் நிலத்தை நோக்கிப் புகுந்து செல்லும் பொழுது அந்த நீர் வழியினை எதிர்த்து இருபுறமும் எழுகின்ற மணலான கடற்கரை தான் முந்தல் என வட்டார வழக்காக வழங்கப்படுகிறது. வடக்கு எல்லையில் குறிப்பிடப்படும் புகுந்ததை என்ற பகுதி புள்ளந்தை என்ற பெயரில் சிறிய கிராமமாக இன்றும் இருந்து வருகிறது. இந்தக் கல்வெட்டின் முழு வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் இருந்து கீழக்கரை நகரின் பழைய பெயர் அணுத்தொகை மங்கலம் எனத் தெரியவருகிறது. இந்த நகருக்கு வழக்கில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள அனுத்தொகை மங்கலம், நினைத்ததை முடித்த விநாயகர் பட்டணம் என்ற இரு ஊர்களும் இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்டதாக