பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 - _ கல்வெட்டுக்கள் சொக்கப்பன் சேர்வையின் ஆணைப்படி மானாமதுரையிலிருந்த சோலையாப்பிள்ளை மகன் கெங்கையாடி என்பவர் வரைந்ததை விரையாச்சிலை ஊரைச் சேர்ந்தவரான கணக்கர் சிதம்பரநாத பிச்சன் என்பவர் இதனைக் கல்வெட்டில் பொறித்தார் என்ற விவரமும் தெரியவருகிறது. மானவீரன் மதுரை என்பது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராகும். மானவீரன் மதுரை என குறிக்கப்பட்டுள்ள இந்த சொல் பின்னர் வானரவீர மதுரை என மருவியது. வானரவீர மதுரை புராணம் சிற்றிலக்கியம் இயற்றப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கி.பி.15, 16ஆம் நூற்றாண்டுகளில் இந்த ஊரின் வைகை ஆற்றுக்கு வடகரையில் வானாதிராயன் என்ற குறுநில மன்னன் ஒருவன் கோட்டையினைக் கட்டி ஆட்சி செய்து வந்தான் மதுரை நாயக்க மன்னர்களுக்குக் கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் இயங்கி வந்த இந்த மன்னன் மீது தனிப்பாடல் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. அதில் மான வீர கஞ்சுகன் என்ற சிறப்புப் பெயர் குறிக்கப்பட்டிருப்பதால் இந்த மன்னன் சுந்தரத்தோன் வானாதிராயன் என்பவனைக் குறிப்பதாக உள்ளது. இந்த மானவீர கஞ்சுகன் என்ற தொடரிலிருந்து மானவீர மதுரை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இருக்க வேண்டும்'. கங்கையாடி - புனிதமான கங்கை ஆற்றில் நீராடி வந்த செயலை இந்தச் சொல் குறிக்கிறது. இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது' 1. "ஸ்வஸ்தியூரீ ஹ அற்பசி மாதம் 1 உ. விரையாச்சிலை உலகவிட - 2. ங்கீகவர சுவாமிக்கு பல்லக்குச் சேர்வைக்கும் பிராமன போசனத்துக்கும் திருப்பணிக்கும் 3. நடக்கத்தக்கதாக கட்டளையிட்டது திருமலையிரகுநாத சேதுபதி காத்த தேவர் புண்ணியமாக 1. பெருந்தொகை 1932 மதுரை தமிழ்ச் சங்க பதிப்பு பாடல்