பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரன்வயல் புரவுக்கும் உறப்பணிப் பாறைக்கும் இன்னாயனார் தேவதானம் 6. கண்னமங்கல வயல்ப்பரப்பு மடத்துப் பொட்டலுக்கும் சூலக் கல்லுக்கு தெக்கும் ஆக இசைஞ்ச பெருநாள் எல்லைக்குள் பட்ட நத்தமும் பரப்பும் குளமும் கீழ் நோக்கிய கிணறும் மேல் நோக்கிய மரமும் யெப்பேர்ப்பட்ட . . . . . 7. யுமிறுப்பதாக கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொடுத்தோம் கல்லும் காவேரி புல்லும் பூமி உள்ளவரைக்கும் ஆண்டு அனுபவித்துக் கொள்வாராகவும் இந்த தற்மத்துக்கு யாதாமொருத்தர் 8. குதம் பண்ணினவர்கள் . . . . . . . . பசுவைக் கொன்ற தோஷத்திலே போவாராகவும்" இந்தக் கல்வெட்டினைத் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் கீலக ஆண்டு ஆவணி மாதம் 28ம் தேதி சிவபுரி கிராமத்தில் உள்ள தான்றோன்றி ஈசுவரர் திருக்கோயிலில் வெட்டிவித்துள்ளார். இந்தக் கல்வெட்டு 28.8.1668ல் வெட்டுவித்தாகத் தெரிகிறது. இந்தக் கல்வெட்டு அருள்மிகு தான் தோன்றி ஈசுவரர் A.R.No. 46 of 1926