பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B1 கல்வெட்டுக்கள் - - என்றும் குடியிருப்புகளும் சாத்தனூர், சாத்தனேந்தல், சாத்தமங்கலம் என்றும் வழங்கப்பட்டன. இதனால் தென்னாட்டில் குறிப்பாகப் பாண்டிய நாட்டில் பல பகுதிகளில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. இந்தக் காரணத்தினால் என்னவோ இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் சாத்தனூருக்கு தெளிவான நான்கு எல்லைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. இந்த நான்கு எல்லைகள் ஆவன 1. கீழ்பாற்க்கெல்லையாவது இந்தக் கோயிலுக்குத் தேவதானமாக வழங்கப்பட்ட சாத்தன்குடி மேலெல்லைக்கும். சித்த நாயனார் தேவதானம் சிறுத்த கண்மாய் நீர்க்கோருவைத் தெற்கு நோக்கி சிறுக் கண்மாய் தென்கடை வாய்க்காலுக்கும், வண்ணான் குண்டுக்கும் மேற்கு. 2. தென்னெல்லை வண்ணான்குண்டு பரப்புக்கும், காஞ்சிரங் குண்டு கண்மாய் நீர்ப்பிடிக்கும் வேலத்துர் கண்மாய்க்கும் வடக்கு. 3. மேற்கெல்கை= இந்த கோவிலுக்குச் சொந்தமான படையனேம்பல் கரைக்கும், தச்சன் குளக் கரைக்கும், தொக்குளிக் கண்மாய் மேல்நடைக் கொம்பு பாறைக்குக் கோட்டை வேங்கைப்பட்டிப் புரவுக் கல்லுக்கும் கிழக்கு. 쓰 வடபாற் கெல்லை இந்தக் கோயிலுக்குச் சொந்தமான மடப்புரம் காப்புரை வயலுக்கு .... .கல்லுக்கும் குமரன் வயல் புரவுக்கும் உறப்பணிப் பாறைக்கும் அண்ணமங்கல வயல்ப்புரவும் மடத்துப் பொட்டல்கல்லுக்கும்,