பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள்= - தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் முனைவர் செ. இராக, எம்.ஏ. பி.எச்.டி., தலைவர்: கல்வெட்டு - தொல்லியல் துறை தமிழ்ப் பலகலைககழகம, உறுப்பினர்:தமிழக அரசு தொண்மைச் சின்னப் பாதுகாப்பு முதுநிலைக்குழு, சென்னை, அணிந்துரை பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்க காலம் முதல் செந்தமிழர்க்காகவும், செந்தமிழ்க்காகவும் தமிழ் வாழ்வாக வாழ்ந்தவர்கள்-வாழ்ந்து வருபவர்கள் சேதுகாவலரான சேதுபதிகள். அவர்கள் கலைபல வளர்த்த காவலர்களுமாவர். "சேதுமூல ரட்சா துரந்தரராக" விளங்கிய சேதுபதிகளைப் புலவர் 'இராமன் அவதாரமாகவே பாடிப் பரவினர். திருவுடை மன்னர்களான அவர்களைத் திருமாலாகவே உருவகம் செய்தனர். அதுமட்டுமல்ல ‘சேதுபதி தரிசனமே இராமலிங்கதரிசனம் எனப் பணிந்தனர் பாவலர்கள். தமிழ்நாட்டில் புலவர்களால் பெரிதும் போற்றிப் புகழப்பட்ட மரபு சேதுபதி மரபு, மூவேந்தருக்கும் இந்த அளவு பாடல்கள் கிடையாது. சைவத் திருமடங்களையும், சைவத் திருத்தலங்களையும், அவர்களைப் போலப் போற்றியவர்கள் எவருமிலர். சேதுநாட்டிற்கு அப்பாற்பட்ட திருவாவடுதுறை ஆதீனமும், பழனித் திருக்கோயிலும் கதை கதையாய்ச் சேதுபதிகள் புகழ் கூறும். வைணவமும் அவர்களால் போற்றப்பட்டது. VII