பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 சேதுபதி மன்னர் கருதப்படுகிறது. இந்தக் குன்றின் மேல்ப் பகுதியிலும் பக்கவாட்டிலும் கி.பி.12ஆம் நூற்றாண்டில் சேது மன்னர்கள் அரண்களை அமைத்ததாக புதுக்கோட்டை தர்பார் ஆவணம் ஒன்றில் காணப்படுகிறது. இந்த ஊரின் மேற்கு, வடக்கு, கிழக்கு சுவர்களை இராமநாதபுரம் கிழவன் ரெகுநாத சேதுபதி அமைத்தார் என்ற செய்தி இராமநாதபுரம் சமஸ்தான மேனுவலில் காணப்படுகிறது. இந்தக் கோயிலின் அன்றாட பூஜை முதலிய தெய்வீக பணிகளுக்கு இராமநாதபுரம் திருமலை ரெகுநாத சேதுபதி நிலக்கொடை வழங்கியுள்ளதை இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. இந்தக் கோயிலின் இறைவருக்கு "அழகிய மெய்யர்" என்ற அழகுப் பெயர் இருந்ததாக இந்தக் கல்வெட்டின் மூலம் அறியப்படுகின்றது. மேலும் இந்தக் கல்வெட்டில் சேதுபதி மன்னரது பெயர் நரேந்திரன் (மனிதருள் சிறந்தவர்) என்றும் தளவாய் (தளபதி) என்றும் அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டினை சேது மன்னரது ஆணைப்படி மானாமதுரை நகரைச் சேர்ந்த சோலையப்பபிள்ளை மகன் கங்கையாடி என்பார் வெட்டுவித்துள்ளார். இந்தக் கல்வெட்டின் படி அழகிய மெய்யர் என்ற பெருமாளுக்கு உதயகால பூஜை என்ற அவசரத்திற்கு கோட்டையூர்ப்புரவில் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பிராமணர்களுக்கு அகரப் பற்றாக வழங்கப்பட்ட இந்த நிலங்களை அவர்கள் பயன்படுத்தாமல் காடாகவும், தரிசாகவும், அநாதியாகவும் இருந்தன. அவைகளை கிரைய சர்தனம் பெற்ற வேளாளர்கள் பலர் அங்கு சுவந்திரங்களை (சலுகைகளை) உண்டாக்கி அந்தப் பகுதிக்கு ரெகுநாதபுரம் என்ற புதிய பெயரிட்டு வழங்கி வந்தனர். ரெகுநாதன் என்ற சொல்லுக்கு ராமனது தலைவன் இராமநாதன் என்று பொருள். சேது மன்னர்கள் இராமேஸ்வரம் இராமநாத சுவாமியின் தொண்டருக்குத் தொண்டராக ஊழியம் செய்து வந்த காரணத்தினால் 1. Pudukottai Dharbar document R.Dis No : 9/1882 - quoted by Prof. Viswanathan his M.Phil thesis (1974) (The Fort town of Thiru Mayam)