பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 எஸ். எம். கமால் இராமநாத பண்டாரம் இராமேசுவரம் திருக்கோயில் இறைபணிகளைக் கண் காணித்து நிறைவேற்ற நியமிக்கப் பட்டிருந்தவர் இராமநாத பண்டாரம் எனப்பட்டார். சோழநாட்டில் இத்தகைய ஆதின கர்த்தர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். பதினேழாம் நூற் றாண்டுக்கு முன்னர் இத்தகைய பணிப்பதவி அந்தக் கோயிலில் இருந்ததாகச் செய்தி இல்லை. இராமநாதசாமியின்பால் இயற்றப் படுகின்ற தொண்டினைக் குறிக்கும் சொல்லாக இது அமைந் துள்ளது. பல்வேறு காலங்களிலும் இந்தப் பணியில் தொடர்ந்த சைவத்துறவிகள் அனைவருக்கும் இராமநாத பண்டாரம் என்ற பொதுச்சொல் வழக்கில் இருந்து வந்தது. இராமேசுவரம் கோயில் காரியக்காரர்' என்ற பெயரும் இவருக்கு இருந்தது. முதலாவது சடைக்கன் உடையான் சேதுபதி (கி.பி. 1604-22) காலத்தில் இந்தப்பணிப் பதவி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கப்படுகிறது. இந்த மன்னர் இயற்றிய தேவர் கட்டளையை அந்தக் கோயிலில் சிறப்புற நிறைவேற்றி வைக்கவும் நாள்தோறும் பூசை முதலான பணிகளைக் கண் காணிப்பதற்கும் இவர் நியமனம் செய்யப்பட்டார். மேலும் இராமேசுவரம் தீவில் திருட்டு, புரட்டு குற்றங்களை செய்தவர் களை தண்டித்து ஒழுங்கும், அமைதியும், நிலவச் செய்யும் உரிமை யையும், மன்னர் இவருக்கு வழங்கி இருந்தார். இந்தப் பணியில் அரசு ஊழியரான மணியக்காரரும் பண்டாரத்திற்கு உதவ வேண் டும் என மன்னர் உத்தரவு பிறப்பித்து இருந்தார். (செ. எண் 5) 3-6-1772 ல் ஆர்க்காட்டு நவாப் இராமநாதபுரம் கோட்டை யைப் பிடித்து மறவர் சீமையை அவருடமையாக்கியதுடன் சேதுபதி மன்னரையும் திருச்சி சிறையிலிட்டதால் இராமேசுவரம் கோயில் பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டது. ஆனால் கோயில் பணியாளர்களது முறையீட்டின் பேரில் இயல்பான பணிகள் நடைபெறுவதற்காக இராமநாத பண்டாரத்திற்கு முழு அதிகாரம் வழங்கிய காரணத்தால் அப்பொழுதிலிருந்த இராமநாத பண்டாரம் கோவில் தர்மகர்த்தா என அழைக்கப்பட்டார். சிறை யிலிருந்த சேதுபதி மன்னர் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்ட பின்னரும் அடுத்து கி.பி. 1803-ல் இராமநாதபுரம் சமஸ்தானம்