பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/1000

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 எஸ். எம். கமால் - இந்தக் குழப்பமான நிலையில் சேதுபதி மன்னரது நேரடி நிர்வாகத்திலிருந்த இராமேசுவரம் கோயிலின் பூஜை மற்றும் நடைமுறைகளும் நிலை குலைந்தன. இதனை நீக்கி இயல்பான கோவில் நிர்வாகத்தை ஏற்படுத்த கோயில் பூஜகர்களும் கட்டளை தாரர்களும் சென்னைக்குச் சென்று நவாப்பைச் சந்தித்து நவாப்பினது ஆலோசனையையும் அனுமதியையும் பெற்றுத் திரும்பினர். திருக்கோயிலின் நடைமுறைகளைக் கண்காணித்து முறைப்படுத்த இராமநாத பண்டாரம் பொறுப்பேற்றுக்கொண்டு ஆரிய மகாஜனங்களுக்கு எழுதிக் கொடுத்த இசைவு முறியாக இந்தச் செப்பேடு அமைந்துள்ளது. ஏற்கெனவே செப்பேடு எண் 2ல் கண்டவாறு இராமேசு வரம் திருக்கோயில் பணிகளில் கி. பி. 1428 முதல் ஈடுபட்டிருந்த பஞ்சதேச பிராமணர்களின் எண்ணிக்கை அப்பொழுது 512 என்றும் அவர்களில் ஈசுபரபட்டர் என்பவர் கோவில் சொத்துக் களைச் சிறப்பான நிலையில் நிர்வகித்து வந்தார் என்பதும், அவர் நாயக்க மன்னரது கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பு உடையவராகவும் இருந்தார் எனத் தெரிகிறது. இந்தக் கட்டளையை மதுரை மன்னர் முத்து வீரப்ப நாயக்கரால் ஏற்படுத் தப் பட்டிருக்கவேண்டும் என ஊகிக்கப்படுகிறது. இதனைப் போன்றே சேதுபதி மன்னர்களது தேவர் கட்டளை’ ’ உடையாத்தேவர் கட்டளை பிரதானி கட்டளை பிச்சை கட்டளை மற்றும் விசுவநாத நாயக்கர், வீரப்ப நாயக்கர், சொக்கர் இராஜசேகர ராஜர் கட்டளைகளும் இந்தக் கோயிலில் ஏற்படுத்தப்பட்டிருந்ததை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. மேலும் இந்தக் கோயிலுக்கு வருகின்ற பொன், வெள்ளி நாணயங்கள், ஆகியவைகளை இருப்பு வைப் பதற்குக் கஜானாவும், திரு ஆபரணங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு கருவூலம், நிலங்களின் விளைச்சலை திரு. அமுது ஆகியவைகளுக்குப் பயன்படுத்த களஞ்சியமும் தனித் தனியாக இந்தக் கோயிலில் இருந்த விபரமும் இந்தச் செப் பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இவைகளையும் கோயிலுக்குத் தானமாக வழங்கப்பட்ட காணிக்கைகள், உண்டியல்கள், பாத்திர பண்டங்கள், பட்டு, பரிவட்டம், வாகனம், விருது, ஆணை, குதிரை, பசுமாடு, கங்கை நீர்க்காவடி ஆகியவைகளையும் கோயில்