பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/1005

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 எஸ். எம். கமால் - -------- கோயிலுக்கு வழங்கிய ஆணை இந்தப் பட்டயம் ஆகும்.: இதனை வழங்கியவர் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் (கி.பி 1760–95) - இந்த உத்தரவு ஒலைப்பட்டயத்தில் அமைக்கப்பட்டிருப்ப தால் மன்னரது விருதாவளிகள், யுகம், ஆண்டுக்கணக்கு போன்ற வைகள் இதில் இடம் பெறவில்லை பூரீ ராம ஜெயம் என்ற தொடக்கச் சொல்லுடன் இரண்டு ஏடுகளில் மன்னரது ஆணை பதினான்கு வரிகளில் வரையப்பட்டுள்ளது. இந்த மன்னரது உத்தரவினை வெளியிட்டுள்ள பிரதானி முத்திருளப்பப் பிள்ளை யின் பெயரும் சாட்சிகளாக ஒப்பமிட்டுள்ள பழனியப்பன் சேர்வை அழியாபதி அய்யணன் அம்பலம் என்ற பெயர்களும் இந்தப் பட்டயத்தில் காணப்படுகின்றன. சேது மன்னர்களது சமயப் பொறைக்குச் சான்றாக இந்தப் பட்டயம் இருந்து வருகிறது. கல்வெட்டு இதழ் எண் 18 : பக்கங்கள் 2-6.