பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 எஸ். எம். கமால் == பாயுமாறு செய்தனர். கண்ணெச்சில் கழிப்பதற்காகப் பலி யிடப்படும் இந்தக் கிடாய் திட்டிக்கிடாய் எனப்பட்டது. இந்தக் கிடாயினை வளமையாக வழங்குவதற்கு நியமனம் செய்யப் பட்டவர்தான் மடைக்கிடாய் முக்கந்தர் ஆவார். ே அரண்மனையிலும் கோயில்களிலும் பலி கொடுக்கப்படும் ஆட்டுக்கிடாய்களை அளிக்கவேண்டிய பொறுப்பும் இந்த முக்கந் தருக்கு இருந்ததினால் கிராமங்களில் சில சுவந்திரங்களும் மானியங்களும் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தன. பிற அளவைகள் தானியம், நெய். எண்ணெய், ஆகியவைகளை அளந்து கணக்கிட மாகாணி. உழக்கு, படி, நாழி, குறுணி, மரக்கால், கலம் என்ற அளவைகள் அன்று வழக்கிலிருந்தன. இவைகளில் குறைந்த அளவான மாகாணி என்பது ஒரு படி அளவில் பதினாறில் ஒரு பகுதி. ஒரு படி இன்றைய இரண்டு லிட்டருக்குச் சமமானது. இந்தப் படி அளவையை அரசு அலுவலர்கள் சரி பார்த்து அனுமதித்த பின்னரே பயன்படுத்தப்பட்டது. இந்தக் காரணத்தினால் செப்பேடுகளில் முத்திரைப்படி என்ற சொல் காணப்படுகிறது. இவை தவிர நிர்ணயம் செய்யப்படாத பிற அளவுகளும் இருந்தன. உப்பு தவச தானியங்களை அளவை எதுவும் இல் லாமல் கைகளினால் அள்ளிக்கொள்ளும் முறை அள்ளுத்தீர்வை' என்றும் கையெடுப்பு' என்றும் செப்பேடுகளில் குறிக்கப் பட்டுள்ளது. ஒரு கையினால் அள்ளிக்கொள்ளப்படும் அளவினைப் பிடி' என்பது போல் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து இணைத்து அள்ளப்படும் தானிய அளவு கையெடுப்பு’’ eg>{,35 LD. நிறுத்தல் அளவையில் பலம், வீசை என்ற அளவுகளுடன் இவையல்லாத சுமை, நடை, பொதி என்ற அளவுகளும் பழக்கத்தி லிருந்தன. இந்த அளவைகளினால் கணக்கிடப் பெறும் பொருள் 26. Raja Ram Rao. T-Manual of Ramnad Samasthanam (1891) p. 310