பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 79 களின் மதிப்பை பொன்' என்ற தங்க நாணயத்திலும் * * гл статтлі, * * என்ற வெள்ளி நாணயத்திலும் குறித்தனர். ஆடகம், சுழிப்பணம், மின்னல்பணம் என்பன அவை. விளைபொருட்கள் பருவகாலங்களில் பெய்யும் மழையைக் கொண்டுதான் உயிர் விளைக்கும் உணவுப் பொருள்கள் மறவர் சீமையில் விளை விக்கப்பட்டன. இந்த விளைபொருட்கள் மீது விதிக்கப்பட்ட நிலத்தீர்வையை விட சின்னஞ்சிறு தொழில்கள் மூலமாக மிகுதி யான வருவாயினை சேதுபதி சீமை அரசு ஈட்டியது. தெரிய வருகிறது. நஞ்சை புஞ்சைத் தானியங்களைத் தவிர இன்று பணப்பயிராகக் கருதப்படும் புகையிலை இந்தப் பகுதியில் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சாகுபடி செய்யப்பட்டது தெரிய வருகிறது. பொதுவாக நல்ல தண்ணிர் பாய்ச்சல் வசதிகள் உள்ள பகுதிதான் புகையிலைப் பயிருக்கு ஏற்றவையாகும். மதுரைச் சீமையின் நீர் வளம் மிக்க பெரியகுளம், திண்டுக்கல் பகுதியில் இந்தப் பயிர் சென்ற நூற்றாண்டில் மிகவும் குறைந்த பரப்பில் ஆங்கிலேயர்களால் விவசாய அறிமுகம் செய்யப்பட்டது. 7 ஆனால் மிகவும் வறட்சியான இராமநாதபுரம் சீமையில் திருத் புல்லாணிப் பகுதியில் இந்தப் பயிர் சாகுபடி செய்யப்பட்டதை பதினேழாம் நூற்றாண்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. (செ. எண்கள் 32, 45, 82) --- நஞ்சை புஞ்சை பயிர் விளைச்சலுக்கு அடுத்த படியாக இங்கே உப்பும் விளைவிக்கப்பட்டது. கி. பி. 1659, கி. பி. 1644, கி. பி. 1733 ஆண்டு செப்பேடுகளில் இந்தப்பகுதியிலிருந்த உப்பளங்களிலிருந்து வருவாய் இறுக்கப்பட்டது தெரிய வருகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிழக்குக் கடற்கரையெங்கும், தொடர்ந்த உப்பளங்கள் ஆங்கிலேயர் ஆட்சியிலும் மிகுதியாக இருந்ததை அவர்களது ஆவணங் கள் தெரிவிக்கின்றன. வேம்பாறிலிருந்து கலியனேரி வரை ஆங்காங்கு இந்த உப்பளங்கள் அமைந்திருந்ததுடன் கீழக்கரைக் கெதிரேயுள்ள வாளைத்தீவு, ஆனைப்பார் தீவு ஆகியவைகளி லும் இந்த உப்பளங்கள் இருந்தன. கி.பி. 1819 ல் உப்பளங் களிலிருந்து வசூலிக்கப்பட வேண்டிய தீர்வைக்கான நடை = 27. Francis W-Gazetteer of Madurai - Vol I. (1909) page.