பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 எஸ். எம். கமால் முறைகளையும் ஆங்கிலேயர் நிர்ணயம் செய்ததுடன், இந்தப் பகுதி உப்பு விளைச்சலை சேமித்து வைக்க இந்தக் கடற்கரைப் பகுதியில் முப்பத்துமூன்று இடங்களில் கிட்டங்கிகளையும் அவர்கள் நிர்மாணித்திருந்தனர். இந்த உப்பு விளைவிக்கப் படும் இடம் அளம் என்றும் விளைச்சலை அளவையிடபொதி, கண்டி என்ற அளவைகள் இருந்ததும் தெரியவருகின்றன. மற்றும், இந்தப்பகுதியில் - கடற்கரையிலும், உள் நாட்டி லும் - பனைமரங்கள் மிகுதியாக இருந்தன. இவைகளில் இருந்து ஒலை, ஈர்க்கு, நார், மட்டை, அகணி, நுங்கு, கள், பதனிர் பழம், கருப்பட்டி - ஆகிய பொருட்கள் கிடைப்பதினால் இதனை மக்கள் கற்பக தருவாகக் கருதினர். இந்தப் பொருட்கள் அனைத்தும் மக்களது அன்றாட பயன்பாட்டிற்கு உதவிய பொழுதும்-பதணிரில் இருந்து தயாரிக்கப்பட்ட கருப்புக்கட்டி களும் (கருப்பட்டி) பனைபழத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பனை மட்டு (பனாட்டு)ம் எதிர்க்கரையில் உள்ள இலங்கைக்கும் அடுத் துள்ள சோழமண்டலக் கரைப்பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டு வந்தன. Шл "Fбіт Ш) சமுதாயப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக மக்கள் தாமாக முன்வந்து அளிக்கின்ற பணம், பொருள் மகமை எனப் படும். இந்தச் செப்பேடுகளில் ஐந்து மகமைகள் பற்றிய விபரங்கள் உள்ளன. குறிப்பிட்ட இலக்குகளை எய்துவதற்காக மகமைகள் உருவாக்கப்பட்ட போதிலும் அதனை இதய பூர்வமாக ஏற்று முறைப்படுத்த வேண்டியவர்கள் மக்கள் ஆனால் சேதுபதி சீமையில் அனைத்து மக்களும் இந்த மகமை வழங்குவதில் ஆர்வ முடன் ஈடுபட்டனர், என்பதை அறியும் பொழுது மக்களிடையே அன்றிருந்த பொதுமை நோக்கும், ஒருமைப்பாட்டுணர்வும் பாராட்டுதலுக்குரியவையாக உள்ளன. இராமநாதபுரம் நகருக்கு அண்மையிலுள்ள பெருவயல் இரணபலி முருகையா ஆலயத்தில் அன்றாட கைங்கரியங்களும் ஆண்டுத் திருவிழாவும் நடைபெற உதவுவதற்கு மகமை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. சேதுராஜன் பேட்டை வணிகர்கள் 28. Madura Dist, Records – Vol. 4684-B/26-2-1833/p.33 35 Vol. 1154/1808.AD/p. 143.