பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 8 | அனைவரும் தங்கள் வருவாயின் ஒரு பகுதியை மகமையாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்து உள்ளனர். (செ. எண். 88) இதே மாதிரியான மகமை இராமநாதபுரம் மாரிதுர்க்கை திருக் கோயில், இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் திருப் பெருந்துறை ஆளுடைய பரமசுவாமி திருக்கோயில், மற்றும் கிழக்கரை சொக்கநாதசுவாமி திருக்கோயில் அர்ச்சகரது பராமரிப்புக்கும் சேது மன்னர்கள் மகமை ஏற்படுத்தியதை நான்கு செப்பேடுகள் தெரிவிக்கின்றன. (செப்பேடு எண்கள் 15, 17, 25, 49) மறவர் சீமை மன்னர், மக்கள், ஆகிய இருபாலரது இறை புணர்வினை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துவதுடன்மன்னரது அதிகார வரம்பிற்குட்பட்ட சீமைகளில் மக்களது தொழில், விளைபொருட்கள், ஆலய விழாக்கள் ஆகியவைகளையும் அறியத் தக்க காலக் குறிப்புக்களாகவும் அவை இருந்துவருகின்றன. கோயில் வருவாய்கள் சேதுபதிச் சீமையில் உள்ள திருக்கோயில்களுக்கு குடிமக்கள் தங்களது அன்புக்காணிக்கையாக பலவிதமான பொருட்களை வழங்கி வந்ததை செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இந்தவரவினங் களில் கிராம மக்களது விளைபொருள்களுடன் அவர்களது கால் நடைச்செல்வங்களும் அடங்கியிருந்தன. இவைகளை இராமேசு வரம் போன்ற பெரிய திருக்கோயில்களில் பராமரித்து வருவதற் காகக் கால்நடைப் பட்டிகளும், பசுமடங்களும் ஏற்படுத்தப்பட்டி ருந்தன. இவை பசுவந்தனை' என்றும் வழங்கப்பட்டது. இவை தவிர சுண்டுவாதம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்ட மாடு களுக்கு அவை நோயின்றும் மீட்சி பெற சூட்டுக்கோலினால் சூலம் போடும் வழக்கமும் இருந்து வந்தது. இதற்கெனப் பெறப்பட்ட சிறு வருவாயும் இராமேசுவரம் திருக்கோயில் பண்டாரத்தில் சேர்க்கப்பட்டது. இந்தக்கோயிலுக்கு மற்றுமொரு வருவாய் இருந்ததை செப்பேடு சொல்கின்றது. இறக்க முக்தி தலம் காசி என்பது ஆத்திகர்களது நம்பிக்கை ஆகும். முந்தைய காலங்களில் இவர்கள் காசிக்குச் சென்று கங்கையில் குளித்து விசுவநாதரைத் தரிசனம் செய்து நிலையான நிம்மதி பெற்றவுடன் அவர்கள் தங்களது வாழ்க்கையை அந்தப் புனித தலத்திலேயே முடித்துக்