பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 எஸ். எம். கமால் கொள்ளும் பழக்கம் இருந்து வந்தது. இத்தகைய காசியாத் திரையை மேற்கொள்ள இயலாத சிலர் இராமேசுவரம் யாத் திரையின் பொழுதும் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்ட னர். இவ்விதம் இறந்த அனாதைப் பிணங்களின் உடமைகளும் அந்தத் திருக்கோயிலுக்கே சேர்க்கப்பட்டு வந்தது. வானமண்டல மாற்றங்கள் : சூரியனை அச்சாகக் கொண்டு செயல்படும் அண்ட கோளங்களில் பூமி பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சூரியனி லிருந்து அமைந்திருந்தாலும், சூரியனது இயக்கத்தில் ஏற்படு கின்ற இயல்பான மாற்றங்கள். பூமியின் இரவு, பகம் பொழு தினைப் பாதிக்கின்றன. அவை சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என்று வழங்கப்படுகின்றன. இந்தப் பாதிப்புகள் பூமியி லுள்ள மனிதர்களுக்கும் பொருந்தும் என்ற நம்பிக்கையும் உணர்வும் பல நூற்றாண்டுகளாக மக்களிடத்தில் இருந்து வரு கின்றது. ஆகையால் அந்தக் கிரகண காலங்களில் முக்கியமான பணிகளில் ஈடுபடாமல் அமைதியாக இறை தியானத்திலும் புனித நீராடலிலும், மக்கள் ஈடுபடுகின்றனர். சூரிய சந்திர இயக்கங்களை, ஆதாரமாகக் கொண்டு வாையப்படுகின்ற. சூரிய ஆண்டு, சந்திர ஆண்டு, கணக்குகளில் இந்த நிகழ்வுகள் முக்கிய மான காலக் குறியீடுகளாகக் குறிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் செப்பேட்டுத் தொகுப்பில் ஐந்து கிரகண நிகழ்ச்சி கள் பதிவு செய்யப்பட்டுள்ளன : 1. “ಕಿ, ೧೯೭೫ – ಶ್ಟಣ್ಣಳಿ •ar 2. ಅಗಿ ದಿಕ್ಕ – ಜ್ಜಣ್ಣ' ಆಗಿ 21 3. சூரிய கிரகணம் -- 鷲警*冕露" சித்திரை மீ” 4. சந்திர கிரகணம் - o *蠶° வைகாசி மீ” 5. சூரிய கிரகணம் - சக ஆண்டு 1684 சித்திரபானு ஐப்பசி மீ (கி. பி 17-10-1762) பொழுதுபோக்குகள் விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் வசதிகள் பெருகியுள்ளதைப் போன்று மக்களது பிரச்சினைகளும் மிகுந்