பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 83 - துள்ளன. அவைகளினின்றும் விடுபட பல பொழுதுபோக்குகள் தோன்றியுள்ளன. ஆனால் முன்னுாறு ஆண்டுகளுக்கு முன்னர் வறண்ட பகுதியான இந்தச் சீமையில் வாழ்ந்த மக்களது வாழ்க்கை பெரும் சுமையாக இருந்ததில்லை. அதனால் அவர் களது சிந்தனையும் செயல்பாடும் சமுதாய நலனுக்குச் சீரிய முறையில் பயன்பட்டன. அன்றைய சேது நாட்டு மக்கள் வளரி எறிதல், வில் அடித்தல், மல் இடுதல், காளை அடக்குதல், கம்பு விளையாட்டுக்கள், போன்ற பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந் தனர்.இவைகளைவிடப் பயனுள்ள பொழுதுபோக்குகளாக விழாக் கள் அவர்களுக்கு உதவின. மாசி, ஆணி, ஆடி, ஆவணி மாதங்களில் இராமேசுவரம் திருக்கோயிலிலும், புரட்டாசி மாதத்தில் இராமநாதபுரம் இராஜராஜேஸ்வரியம்மன் திருக்கோயிலிலும், மார்கழி மாதத்தில் திருஉத்திரகோசமங்கை திருக்கோயிலிலும், திருப்புல்லாணி பெருமாள் கோயிலிலும் இராமநாதபுரம், மாரிதுர்க்கை ஆலயத்தி லும் சிறப்பானவிழாக்கள் எடுக்கப்பட்ட செய்திகளை செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இராமேசுவரம் ஆவணிமூலத் திருவிழாவும் இராமநாதபுரம் மகர் நோன்பு விழாவும் மக்களைப் பெரிதும் ஈர்த்து வந்தன. இவைதவிர, ஆடி, தை மாதங்களில் சேதுக் கரையிலும், தனுஷ்கோடியிலும், கடல் நீராடலில், மன்னரும், மக்களும் கலந்துகொள்வது பெரிய பொழுதுபோக்காகும். கிடைக்காத செப்பேடுகள் : இராமேஸ்வரம் திருக்கோயிலின் மூன்றாவது பிரகாரம் உலகப் புதுமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த அற்புதக் கலைப் படைப்பினை கி. பி. 1720-க்கும் கி. பி. 1765-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சிசெய்த சேதுமன்னர்கள் செய்து முடித்துள்ளனர். கடல்சூழ்ந்த இராமேசுவரம் தீவில் பிரம்மாண்ட மான இந்தக் கல் கட்டுமானத்தைக் காலங்கடந்து நிற்கும் இறைவன் மீது கொண்டுள்ள பக்தியின் சின்னமாக அவர்கள் அமைந்துள்ளனர். இதனை நிர்மாணித்த கல் தச்சர்களைச் சேதுபதிகள் பாராட்டி சீவித காணிகள் வழங்கிச் சிறப்புச் செய் திருக்க வேண்டும். ஆனால் அந்த ஆவணம் செப்பேடுகள் இன்று வரைக் கிடைக்கவில்லை. இதனைப் போன்றே திருப்புல்லானி, திருவாடானை, காளையார் கோவில். நாட்டரசன் கோட்டைத் திருக்கோயில்களை அமைத்து உதவிய ஸ்தபதிகள் சேதுமன்னர்